800 இயக்குனர் எம்.எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் சர்வதேச இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் "முத்தையா முரளிதரனின்" வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அறிவுப்பு 2019-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பியது. இப்படத்திற்கு எதிராக இந்தியாவில் வாழும் சில சமூகத்தினர் மற்றும் உலகளவில் வாழும் தமிழ் இன சமூகம் சார்பில் பல எச்சரிக்கையும், எதிர்ப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் அறிவுப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் இணைந்து இப்படத்தின் மோஷன் போஸ்டர் என 2020ஆம் ஆண்டு அக்டோபர் 13ல் படக்குழுவினரால் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.