96 இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரேம் குமார், விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.
கதை :
பயணப் புகைப்படக் கலைஞர் கே.ராமசந்திரன் (விஜய் சேதுபதி), தனது சொந்த ஊருனான தஞ்சாவூருக்கு யதர்ச்சையாக வருகிறார். தான் படித்த பள்ளியை பார்த்த தருணத்தில் இருந்து, அவருடைய பால்ய கால காதல் நினைக்கு வருகிறது. உடனே தன்னுடன் பள்ளியில் படித்த அனைவரையும் பார்க்க ஆசைப்படுகிறார். ரீயூனியனுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ராமசந்திரந்திரனை பார்ப்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து சென்னை வருகிறார் ஜானகி தேவி (திரிஷா). இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த நெகிழ்வான தருணங்களே 96.