ஆம்பள தமிழ் குடும்ப திரைப்படம். இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக விஷாலும் கதாநாயகியாக ஹன்சிக்காவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா.
கதை :
கட்சி பொது கூட்டங்களுக்கும் சிறுசிறு நிகழ்ச்சிகளுக்கும் ஆள் சேர்க்கும் தொழில் செய்து வருகிறார் சரவணன் (விஷால்) அங்கு படிப்பிற்காக சுற்றுலாவிற்கு வந்த ஹன்சிகா மீது காதல் வயப்படுகிறார். பின்னர் பிரிகின்றனர். சரவணன் தன தாய் மூலம் தன தந்தையை பற்றி அறிந்து தன் தந்தையையும் தம்பியையும் தேடி செல்கிறார். அங்கு அவர் தன தந்தை பிரபு மற்றும் தம்பி சதீஷ் ஆகியோரை கண்டறிந்து தன்னுடைய மற்றுமொரு சகோதரரான வைபவையும் கண்டறிகின்றனர். பிரபு தனக்கு மூன்று தங்கைகள் உள்ளனர் என்றும் அவர்களின் மூன்று மகள்களையும் தன மூன்று மகன்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார். அவ்வாறு செய்தால் தான் தன் குடும்பம் ஒன்றுசேரும் என்கிறார். தன தந்தையின் ஆசையை சரவணன் நிறைவேற்றினரா? தன் காதலியுடன் இணைந்தாரா? என்பது மீதி கதை.