அடடே சுந்தரா இயக்குனர் விவேக் அத்ரேய இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம், நதியா, ரோகினி என பல திரைப்பிரபலங்கள் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நவீன் எர்னெனி தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை, காதல் என திரைப்பட ரசிகர்கள் குடுப்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் ரவிதேஜா கிரிஜல எடிட்டிங் செய்துள்ளார்.
நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தினை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர், படக்குழுவினர். இப்படம் 2022 ஜூன் 10ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.