அடுத்த சாட்டை இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவர்களுடன் அதுல்ய ரவி, ஸ்ரீ ராம் என பல முன்னை தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.
கல்வி மற்றும் மாணவர்களின் எழுச்சி என சமுதாய அக்கறையுடன் உருவாகும் இப்படத்திற்கு தயாரிப்பாளராக இப்படத்தின் நாயகன் சமுத்திரக்கனி தயாரிக்க, ஸ்ரீ வாரி பிலிம் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
அடுத்த சாட்டை படத்தின் இயக்குனர் அன்பழகன், சமுத்திரக்கனி, தம்பி ராமையா கூட்டணியில் உருவான சட்டை படத்தின் தொடர்ச்சியாக அதே கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் பள்ளி படிப்பினை தொடர்ந்து கல்லூரி படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி எடுதிரைத்துள்ளார் இப்படத்தின் இயக்குனர்.
அடுத்த சாட்டை படத்தின் கதை
ஒரு கலை கல்லூரியில் தலைமை பேராசிரியராக தம்பி ராமையா பணியாற்றி வருகிறார். அந்த கல்லூரியில் ஜாதியின் அடிப்படையில் இரண்டு சமூகமாக பிரிந்துள்ளனர் மாணவர்கள். அவர்களை அவ்வழியிலே வழி நடத்துகிறார் தம்பி ராமையா. அந்த கல்லூரிக்கு ஒரு பேராசிரியராக வருகிறார் சமுத்திரக்கனி. இவர்களின் இந்த பண்பினை கண்டு கோபம் கொள்ளும் சமுத்திரக்கனி, மாணவர்களுக்கிடையே ஒற்றுமையை விழைக்கிறார்.
அந்த கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கிடைக்கும் முன்னுரிமைகளை சுட்டி காட்டி தட்டி கேட்கிறார், சமுத்திரக்கனி. இதனால் இவருக்கும் அந்த கல்லூரியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கும் பிளவு ஏற்படுகிறது. மற்ற ஆசிரியர்கள் இவரை அந்த கல்லூரியில் இருந்து வெளியேற்ற பல சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர். இதனை பொருட்படுத்தாமல் சமுத்திரக்கனி மாணவர்களுக்கிடையே ஜாதிகள் ஏதும் கிடையாது என ஒற்றுமையை விழைத்து, அவர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறார்.
இறுதியில் என்ன ஆனது? சமுத்திரக்கனி தம்பி ராமையாவின் சூழ்ச்சியில் சிக்கினாரா? இல்லை தம்பி ராமையா நல்லவராக மாறினாரா? என்பதே படத்தின் கதை.