ஆல் இன் ஆல் அழகு ராஜா , நவம்பர் 2, 2013ல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படம். இது தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ஆகும். இதில் கார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால், பிரபு, சரண்யா, நாசர், பாசுகர் போன்றோர் நடித்துள்ளனர்.
கதை
கார்த்திக் (இராஜா) உள்ளூரில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறார். அவருடைய உதவியாளர் சந்தானம். தன்னுடைய தொலைக்காட்சி புகழ்பெற்று தான் ஒரு கோடி சம்பாதிக்கும் வரை தனக்கு திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார். ஒரு திருமணத்தில் காஜல் அகர்வாலை (தேவிப் பிரியா) சந்தித்ததும் அவரை காதலிக்க தொடங்குகிறார். பிரபு அத்திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுத்து ஏன் என்பதை கார்த்திக்குக்கு விளக்குகிறார். முடிவில் கார்த்தியும் காஜல் அகர்வாலும் இணைந்தார்களா என்பதை இயக்குநர் நகைச்சுவையாக சொல்லியுள்ளார்.