X
அன்பிற்கினியாள்
Drama | 05 Mar 2021 | U | 125 Mins
Tamil

அன்பிற்கினியாள் கதை

அன்பிற்கினியாள், தமிழ் திரைப்பட பிரபல முன்னணி நடிகரான அருண் பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' புகழ் இயக்குனர் கோகுல் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் மலையாள திரையுலகில் வெளியாகி பிரமாண்ட ஹிட் ஆன 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக் படம் ஆகும். ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் அருண் பாண்டியன் பெற்று தனது மகளை இப்படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார்.


அன்பிற்கினியாள் திரைப்படத்தின் கதை

சிவம் (அருண் பாண்டியன்) தனது ஒரே மகள் அன்பு என்னும் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்) உடன் சந்தோசமாக வாழந்து வருகிறார். அன்பு தனது தந்தையின் மேல் உயிராக உள்ளார். தனது தந்தை வாங்கிய கடனை அடைக்க கன்னட நாட்டிற்கு ஒரு செவிலியராக செல்ல முயற்சி செய்து கொண்டு வருகிறார்.

அன்பிற்கும் - சார்லஸ் என்னும் வாலிபருக்கு இடையே ஒரு காதல் கதை ஓடுகிறது. ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் இவர்கள் செல்லும் போது காவலர்கள் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, பின் இவர்களின் பெற்றோர்களுக்கு தகவல்களை கூறுகின்றனர்.

இதனால் சிவம் தனது மகளுடன் சரியாக பேசுவதில்லை. இதனை தொடர்ந்து தான் பணி செய்யும் உணவகத்திற்கு செல்லும் அன்பு, அன்று எதிர்பாராத விதமாக அந்த உணவகத்தின் குளிர்சாதன பெட்டிக்குள் மாட்டிக்கொள்கிறார். 

அன்பு-வை காணாமல் ஒரு புறம் தந்தை சிவம், மற்றொரு புறம் காதலன் சார்லஸ் என்பவரும் தேடுகின்றனர். போலீஸ் விசாரணை மற்றும் பல இன்னல்கள் அன்று இவர்கள் சந்திக்கின்றனர். இறுதியில் இவர்கள் அன்புவை எவ்வாறு சந்தித்தனர், அன்பு எப்படி அந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து தப்பிக்கிறார் என்பதே படத்தின் சுவாரஸ்ய திரில்லர் திரைக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+