அவனே ஸ்ரீமன் நாராயணா கதை

  அவனே ஸ்ரீமன் நாராயணா இயக்குனர் சச்சின் ரவி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, சான்வி ஸ்ரீவாஸ்தவ முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஹச் கே பிரகாஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் சரண் ராஜ் மற்றும் பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளனர்.

  அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் பிரத்தியேக தகவல்கள்

  கன்னட மொழியில் உருவாகியுள்ள இப்படத்தினை தமிழில் டப் செய்து வெளியிடவுள்ளனர் தமிழ் மற்றும் கன்னட பிரபலங்கள், இப்படம் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டப்பிங் செய்து பேன் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. அதிரடி படமாக உருவாகியுள்ள இப்படத்தினை 2019 டிசம்பர் 27இல் உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்யப்பட்டு அணைத்து மொழிகளிலும் இப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் விளம்பர பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

  இப்படத்தின் நாயகனான ரக்ஷித் ஷெட்டி 2010ல் நடிகராக அறிமுகமானவர். குறைந்த காலத்தில் ஒரு பேன் இந்திய திரைப்படத்தில் நடித்து இந்திய முழுவது இவர் பிரபலமாகியுள்ளார். பொதுவாகவே நகைச்சுவை மற்றும் நகைச்சுவை கலந்த திரைக்கதையில் நடித்து வரும் இவர், இத்திரைப்படத்தில் ஒரு சுவாரஸ்ய திரைக்கதையினை நகைச்சுவை மற்றும் அதிரடி கதையாக எழுதியுள்ளார். 2016ல் இவர் நடிப்பில் கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றி பெற்ற "க்ரிக் பார்ட்டி" படத்தினை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படம் வெளியாகவுள்ளது.

  இப்படத்தின் நாயகியான சான்வி ஸ்ரீவாஸ்தவ தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர், இவர் கன்னட திரையுலகில் பிரபல முன்னணி நடிகை ஆவார். இவர் இபபடத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

  அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் கதை

  இப்படம் 1980ம் காலகட்டத்தில் கர்நாடகாவில் உள்ள அமராவதி என்னும் ஒரு நகரத்தில் நடக்கும் ஒரு கற்பனை கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

  கர்நாடகாவில் உள்ள அமராவதி நகரத்திற்கு போலீஸ் அதிகாரியாக வரும் ரக்ஷித் ஷெட்டி, அந்த இடத்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜெயராமன் என்பவரின் நட்பினை பெற்று ஒரு ஊழல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

  அந்த கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜெயராமன் ஒரு புதையலை தேடி அலைகின்றான், இதனை அறிந்த ரக்ஷித் ஷெட்டி அவருக்கு அந்த புதையலை தேடி தருவதாக கூறி அவரையும், துக்கராமா என்னும் ரௌடியையும் ஏமாற்றி புதையலை, இவர் எவ்வாறு அடைகிறார் என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய மற்றும் நகைச்சுவை மிகுந்த திரைக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie அவனே ஸ்ரீமன் நாராயணா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).