பாரம் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் வெட் நாயர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இப்படத்தின் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
கதை
சென்னையில் வாட்ச்மேனாக பணியாற்றும் ஒரு முதியவர், தன் தங்கை வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் காலையில் பணிக்கு செல்லும்பொழுது எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தால் அந்த முதியவரின் இடுப்பு எலும்பு முறிகிறது. அதனால் படுக்கையில் இருக்கும் அவர் முதுகெலும்பு முறிந்த 8 நாட்களில் உயிரிழைக்கிறார். அதுவரை என்னென நிலைமைகளை அவர் கடந்துள்ளார் என்பதே படத்தின் கதை.