பாபா பிளாக் ஷீப் - இயக்குனர் ராஜ் மோகன் இயக்கத்தில் அம்மு அபிராமி, ராஜ்மோகன், விக்னேஷிகாந்த், போஸ் வெங்கட் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் பட தயாரிப்பாளர் ராகுல் தனது 'ரோமியோ பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை கலாட்டாவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார்.