X
பைரவா
Action | Romance | 12 Jan 2017 | U |
Tamil

பைரவா கதை

பைரவா இயக்குனர் பரதன் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்த நகைச்சுவை, அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

கதை :

வங்கியில் பணம் வசூல் செய்யும் வேலையை செய்து வருகிறார் விஜய். அவரின் உயர் அதிகாரியாக வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். தனது உயர அதிகாரியின் மகள் திருமணத்தில் ஏற்பட்ட சிக்கலை நீக்கி உதவுகிறார் விஜய். 

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணத்திற்கு செல்லும் விஜய், அங்கு கீர்த்தி சுரேஷை பார்த்ததும் காதலில் விழுகிறார். கீர்த்தியிடம் தன் காதலை கூற செல்லும்போது தான் அவரை பல பிரச்சனைகள் சுற்றிவருவதை அறிகிறார். அந்த பிரச்சனையை நீக்க, திருநெல்வேலிக்கு செல்கிறார்.

சமூகத்தில் ஊழல் மனிதனாகவும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மூலமும், பல லட்ச கணக்கில், சம்பாதிக்கும் ஜெயந்தா (ஜெகபதி பாபு) என்பவரை எதிர்த்து தான் விஜய் போராடுகிறார். 

கீர்த்தி சுரேஷுக்காக களத்தில் இறங்கும் விஜய், பின் ஜெகபதி பாபுவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ முயலும் போது பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறார். அந்த இன்னல்கள் எவை, அதிலிருந்து விஜய் எவ்வாறு மீண்டார் என்பதே மீதிக்கதை.  

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+