twitter

    பிஸ்கோத் கதை

    பிஸ்கோத் இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். பிஸ்கோத் படத்தின் இயக்குனர் தனது தயாரிப்பு நிறுவனமான "மசாலா பிக்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார்.

    நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆர் கே செல்வா எடிட்டிங் செய்துள்ளார்.

    பிஸ்கோத் படத்தின் முக்கிய தகவல்கள்

    சந்தானத்தின் நகைச்சுவை கலாட்டாவில் உருவாகியுள்ள இப்படத்தில் சௌகார் ஜானகி, ஆனந்த் ராஜ், ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை 2020 பிப்ரவரி 7ல் படக்குழுவினர் இணையதள பக்கம் மூலம் வெளியிட்டுள்ளனர்.

    பிஸ்கோத் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் வீடியோக்கள் 

    பிஸ்கோத் திரைப்படத்தின் கதை

    இத்திரைப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தின் திரைக்கதை சந்தானம் நடித்த கதாபாத்திரங்களை மையமாக கொண்டது அல்ல.

    சந்தானத்தின் தந்தை ஆடுகளம் நரேன் ஒரு பிஸ்கோத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். அவருக்கு பலமாக அவரது நண்பன் ஆனந்த் ராஜ் உள்ளார். ஒரு குடிசை தொழிலாக இருக்கும் இந்த பிஸ்கோத் தயாரிப்பு நிறுவனத்தை பெரிய இடத்திற்கு கொண்டு செல்ல சந்தானத்தின் தந்தை ஆசைப்படுகிறார்.

    ஆடுகளம் நரேன்-ற்கு எப்படியாவது தனது மகன் சந்தானத்தை ஒரு பணக்காரராக வாழ வைக்க வேண்டும் என்ற ஒரு தந்தையின் பாசம் உள்ளது. ஆனால் இவர் திடீரென இறந்துவிடுகிறார். 

    பின் சந்தானம் என்ன ஆனார்? பிஸ்கோத் தயாரிக்கும் தொழில் என்ன ஆனது? அப்பா நரேனின் ஆசை நிறைவேறியதா என்பது இந்த பிஸ்கோத் திரைப்படத்தின் திரைக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie பிஸ்கோத் with us? Please send it to us ([email protected]).