பிரேக்கிங் நியூஸ் இயக்குனர் அன்றெவ் பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் பீட்டர் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தை பற்றிய தகவல்கள்
இத்திரைப்படத்தில் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிகர் ஜெய் நடிக்கிறார். ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை கையாண்டுள்ள நிலையில் தற்போது தமிழ் திரையுலகிலும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் அறிமுகமாகின்றன.
இத்திரைப்படத்தில் ஜெய் மற்றும் பானுஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், மேலும் இவருடன் தேவ் கில், ராகுல் தேவ் ஆகியவர்கள் இப்படத்தில் முக்கிய பங்களிப்பு ஆற்றியுள்ளனர்.
கதை
சென்னையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தின் சாப்ட்வேர் பொறியாளராக பணியாற்றும் ஒரு நடுத்தெரு குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஜீவன் (ஜெய்), தனது மனைவி ஹரி பிரியா (பவனி ஸ்ரீ), நண்பர்கள், உறவினர்கள் என சாதாரண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை அவ்வப்போது கோபத்துடன் தட்டி கேட்கிறார், இவரின் கோபம் குணம் கண்டு இவர்களின் உறவினர் மற்றும் நண்பர்கள் பயப்படுகின்றனர். இவரை மாற்ற இவரது மனைவி ஹரிப்ரியா போராடி வருகிறார். இவராலும் இவரை மாற்ற இயலாததால் மனைவியும் இவரை கைவிடுகிறார்.
அனைவராலும் கைவிடப்பட்டு தனிமையில் சிதைந்துபோன ஜெய், வேறுவழின்றி தனிமையில் சுற்றித்திரிகிறார். தீடிரென விண்வெளியிலிருந்து ஒரு விண்கல் தாக்குகின்றது. அவ்விடத்தில் இருந்த ஜெய்-யினை விண்கல்லின் ஒரு சிறு துகள் தாக்குகின்றது. அச்சமயம் இவரது உடலில் உள்ள உயிரணுக்களில் சில மாற்றங்கள் நடக்கின்றன. இம்மாற்றத்தினை தொடர்ந்து இவருக்கு ஒரு சூப்பர் ஹீரோ சக்தி கிடைக்கிறது.
இவர் தன சக்திகளை உணரும் நேரத்தில் தமிழகத்தில் அரசாங்கத்தால் கூட நெருங்க முடியதா பெரும் சக்தியுடைய பூரி மற்றும் உராஜ் ஆகிய இருவர் வள நிலங்களை அழித்து, அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்கு திட்டமிடுகின்றனர். இந்த இரட்டியர்களை இப்படத்தின் நாயகனான சூப்பர் ஹீரோ ஜெய் தடுக்கிறார். அதை எவ்வாறு செய்கிறார்? இவரின் சக்திகளால் நாடாகும் விபரீதங்கள் என்ன? என்பதே படத்தின் கதை.
சூப்பர் ஹீரோ திரைக்கதை எல்லா தரப்பிலும் ஒரே கதையம்சத்தை கொண்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் திரைக்கதை அழுத்தங்களால் அப்படமானது சிறப்பிக்கப்படுகிறது.