கடவர் இயக்குனர் அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை இப்படத்தின் நாயகி அமலா பால் தனது அமலா பால் ப்ரோடுக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் நாயகி அமலா பால் உடன் ஹரிஷ் உத்தமன், முனீஷ்காந்த் ராமதாஸ், அதுல்ய ரவி, அதித் அருண் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர். ஒரு திரில்லர் திரைக்கதையாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
கடவர் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் 2022, ஆகஸ்ட் 12ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
கடவர் படத்தின் கதை
பிரபல மருத்துவரான சலீம் ரஹ்மானை ஒரு மர்ம மனிதன் காரோடு வைத்து எரித்து கொலை செய்து விடுகிறான். இந்த கொலைக்கும் சிறையில் இருக்கும் வெற்றி (திரிகுன்)க்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது.
ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் எப்படி கொலை செய்ய முடியும்? வெற்றிக்கு வெளியில் இருந்து உதவும் அந்த மர்ம கொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை?