சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் - அறிமுக இயக்குனர்களான விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேஷவ் இணைந்து இயக்கும் திரைப்படம். இப்படத்தில் நடிகர் வைபவ் ரெட்டி, அதுல்யா ரவி, ரெடின் கிங்ஸ்லீ, ராஜேந்திரன், ஆனந்த் ராஜ் என பலர் நடிக்க, இசையமைப்பாளர் டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார், சுரேஷ் ஏ பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.
பாண்டியும் பூச்சியும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பெரும் தொகை பணத்தை இழந்து பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையை சரிசெய்ய முயற்சிக்கும் போது, நாலு கைதிகளை சந்திக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து ஒரு வங்கியை கொள்ளை அடித்து பணத்தை மீட்டெடுத்து கடன்களை அடைக்க முடிவு செய்கிறார்கள். இப்படி ஒரு சிக்கலான, அதிரடி திட்டம் உருவாகிறது.
வெளியீட்டு தேதி
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் 2025 ஜூன் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது.