X
டி டி ரிட்டர்ன்ஸ்
Comedy | Drama | Horror | 28 Jul 2023 | U/A | 125 Mins
Tamil

டி டி ரிட்டர்ன்ஸ் கதை

டி டி ரிட்டர்ன்ஸ் - இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, மொட்ட ராஜேந்திரன், மஸூம் ஷங்கர் என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை - திகில் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை ஆர் கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஆஃப் ரோ இசையமைத்துள்ளார்.

திகில் - திரில்லர் திரைக்கதையை தமிழ் திரைப்பட ரசிகர்கள் நகைச்சுவையில் கண்டு மகிழும் வண்ணத்தில் உருவாக்கியுள்ளனர் டி டி ரிட்டர்ன்ஸ் படக்குழுவினர். ஒளிப்பதிவாளர் தீபக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார்.

டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 ஜூலை 28ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.



டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் கதை

கதைக்கரு: சந்தானம் திரைவாழ்வில் முக்கிய வெற்றி படமாக 'தில்லுக்கு துட்டு' கதை வடிவத்தை மாற்றாமல் அதே கதைக்களத்தில் சில சுவாரஸ்ய கதாபாத்திரத்தை மாற்றி உருவாகியுள்ளது, டி டி ரிட்டர்ன்ஸ்.

கதை: நாயகி சுரபி-யை ஒரு பிரச்சனையை இருந்து காப்பாற்ற, சந்தானம் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து பணத்தை திருடுகிறார்கள். அவர்கள் திருடிய பணத்தை ஒரு பேய் பங்களாவில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கும் இவர்கள், மீண்டும் பணத்தை எடுக்க செல்லும் போது அந்த பேய் பங்களாவில் மாட்டி கொள்கின்றனர். பின் அங்கிருந்து சந்தானம் மற்றும் அவரது குழு எப்படி தப்பித்தனர் என்பது தான் டி டி ரிட்டர்ன்ஸ் படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+