டேன்னி இயக்குனர் சந்தனமூர்த்தி இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், வேல ராமமூர்த்தி, யோகிபாபு நடிக்கவிருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் பி ஜி முத்தையா தயாரிக்க இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் 2019-ம் ஆண்டு மார்ச் 5-ல் வரலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினரால் இணையத்தளத்தில் வெளியானது.
டேன்னி படத்தின் கதை
தஞ்சையின் பிரபலமான மருத்துவர், தனது ஒரே மகனை செல்லமாக வளர்க்கிறார். மகன் கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் புழங்கும் ஒரு மருந்தை போதையாக உபயோகிக்க ஆரம்பித்து, அந்தப் போதையால் இளம் பெண்களைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்கிறார். இதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் பெற்றோர் அளித்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க தொடங்கும் வரலட்சுமியின் திரில்லர் பயணம் தான் இப்படம்.