twitter
    X
    Home சினி தரவரிசை

    2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, November 25, 2020, 09:48 AM [IST]

    2020-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக ட்ரெண்ட் ஆன பிரபலங்கள் மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகள் சிலர் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் இந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் அதிக பேசப்பட்ட திரை நட்சத்திரங்கள் இங்கு உள்ளனர். வனிதா விஜயகுமார், மீரா மிதுன், சனம் ஷெட்டி, லட்சுமி ராமகிருஷ்ணன், சோனு சூட் என விமர்சனம் ரீதியாகவும் மற்றும் தனது நல்ல முயற்சிகள் மூலம் மக்களின் கவனத்தை கவந்துள்ள நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

    cover image

    1

    கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் விமர்சனங்களுக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இரண்டு முறை கலந்து கொண்டு தமிழ் திரையில் பலரின் கவனத்தை பெற்று பிரபலமானவர். அடுத்தடுத்து இவர் செய்யும் பல முயற்சிகள் தமிழ் திரையுலகில் விமர்சனமாக பிரபலமானது. இந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தினை பெற்று வெற்றி பெற்ற இவர், அதே தொலைக்காட்சியில் "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். ஒரு நடுவராக இருந்து இவர் கூறும் கருத்துகள் பல விமர்சனங்கள் ஏற்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் "பீட்டர் பால்" என்னும் ஒரு தொழிலதிபரை நான்காவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பல பத்திரிக்கை நிறுவனங்களின் கவனத்தை பெற்ற இவர், இவரது திருமணம் தொடர்பாக தமிழ் சினமாவில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒரு முக்கிய நகரான தஞ்சாவூர் நகரினை பிறப்பிடமாய் கொண்ட இவர், "அங்கு வாழும் ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள் உண்டு". என்று வனிதா கூறியுள்ள கருத்துக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.

    2

    தமிழ் சின்னத்திரையில் ஒரு பிரபல நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வரும் லட்சுமி இராமகிருஷ்ணன், இந்த நிகழ்ச்சிக்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல காட்சிகளில் சில ஆண்டுகளாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இவரை விமர்சித்து கேலியும் கிண்டலுமாக பல மீம்ஸ் மற்றும் விடியோக்களை பதிவேற்றும் செய்துள்ளனர் இளைஞர்கள். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகையாகவும், இயக்குனராகவும் புகழ் பெற்ற இவர், "வனிதா விஜயகுமார் - பீட்டர் பால்" திருமணம் தொடர்பாக இவர், பீட்டர் பால் மனைவியின் பக்கம் இருந்து சில கருத்துகளை கூறியுள்ளார். இவருக்கு பதிலளிக்கும் வகையில் வனிதா விஜயகுமார் மிக மோசமான முறையில் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். இதற்காக ட்விட்டர் போன்ற சுமுக வலைத்தளத்தில் மிக ட்ரெண்ட் ஆன இவருக்கு ஆறுதல் அளிக்கும் முறையில் பல பிரபலங்கள் இவருக்கு துணையாக தனது கருத்துகளை தெரிவித்தனர்.

    3

    இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமான இவர், ஒரு சின்னத்திரை நடிகராக இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பல எதிர்ப்புகளையும் தடைகளையும் கடந்து ஹிந்தி சினிமாவில் பிரபலமான இவர், பல ரசிகர்களை கவர்ந்து ஒரு குறிப்பிடப்படும் முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.

    தமிழ், மலையாளம் என தென்னிந்தியாவிலும் மிக குறைந்த வயதில் புகழ் பெற்றுள்ள இவர், இந்த 2020-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணங்களும் மர்மமாக உள்ள நிலையில், ஹிந்தி திரை பிரபலங்கள் இவரை ஒதுக்கியுள்ளனர் அந்த மன அழுத்தமே காரணம் என்ற செய்திகள் வெளியாகி பல சர்ச்சைகள் இந்திய அளவில் கிளம்பியது.

    சி.பி.ஐ விசாரணைக்கு சென்றுள்ள இவரின் வழக்கு, இது தற்கொலை இல்லை கொலை என்ற சில வதந்திகள் வெளியாகி பல பரபரப்புகள் ஏற்படுத்தியுள்ளது.

    4

    தமிழ் மற்றும் கன்னட சினிமா என பல படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்கள் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், இந்த ஆண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அரசியல் ரீதியா சில கருத்துகளை தெரிவித்த இவருக்கு, தமிழ் சினிமா நடிகரும், அரசியல்வாதியுமான சீமான் மற்றும் அவரது கட்சியினர் இவருக்கு கொடுத்த சில தொல்லைகளால் இவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவந்துள்ளார். ஆனால் இதற்கான காரணங்கள் ஆதாரப்பூர்வமாக எதுவும் இல்லை.

    5

    2019-ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவை பெற்று பிரபலமான தர்ஷன் தன்னை கைவிட்டதாக இவர் அளித்த புகார் தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

    இவர் பங்கேற்கவிருந்த அந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இவரது காதலரான தர்ஷனுக்கு வாய்ப்பளித்து, அவரது வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளார் சனம் ஷெட்டி, பின் அவர் அந்த போட்டியில் இருந்து வெளியே வந்ததும், அவருக்கு கிடைத்த பல பிரபலங்களின் அறிமுகத்தால் தர்ஷன் சனம் ஷெட்டியின் காதலை உதறிவிட்டார்.

    சனம் ஷெட்டி மாடலிங் துறையில் ரசிகர்களின் கவனத்தை பெற இவர் வெளியிட்ட சில புகைப்படங்களை கண்டு சனம் ஷெட்டி மீது கோபம் கொண்டுள்ளதால் அவர் இவரின் காதலை நிறுத்தியுளதாளக அவரது தரப்பில் செய்திகள் வெளியாகின.

    6

    படப்பிடிப்பு இடத்திற்கு தாமதமாக செல்லுவது, சரியாக படக்குழுவிற்கு ஒத்துழைப்பு அளிக்காதது என பல புகார்கள் சிலம்பரசனின் மேல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த புகார்கள் தொடர சில ஆண்டுகளுக்கு முன் "மாநாடு" படத்தினை பற்றிய அறிவிப்புகளை வெளியிட்ட படக்குழு, இன்னும் அந்த படத்திற்கு சிம்புவின் கால்ஷீட் கிடைக்காததால் சிம்புவை அந்த படத்தில் இருந்து நீக்கி, படத்தின் முக்கிய அறிவிப்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகின.

    பின் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி அந்த படத்தில் சிம்புவை மீண்டும் நடிக்க வைத்துள்ளார், சிம்புவின் தாய். பின் இவரது கால்ஷீட் பிரச்சனையால் பல பிரபலங்கள் ஆத்திரம் கொண்டு இவரின் மேல் பல புகார்களை அளித்துள்ளனர். இதனால் பல நெருக்கடியில் இருந்து வந்துள்ள சிலம்பரசன், தற்போது பலரை அனுசரித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பிரபலமாக உள்ளார்.

    7

    2020-ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய "கொரோன" நோய் காரணத்தால் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது. தனது இருப்பிடத்தை விடுத்தது வேறு மாநிலத்திற்கு வேலைக்காக இடம் பெயர்ந்துள்ள பல கூலி தொழிலார்களுக்கு ஆதரவு அளித்து அவரவர் இருப்பிடத்திற்கு செல்ல விமானம், பேருந்து என இவரது செலவில் அவர்களுக்கு உதவி செய்து இந்தியாவில் பலரின் அன்பினை பெற்றுள்ளார், சோனு சூட்.

    திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ஒரு வில்லன் நடிகராக சித்தரிக்கப்பட்ட இவர், ஒரு இக்கட்டான சமயத்தில் பாரபட்சம் காட்டாமல் மக்களுக்காக இவர் செய்த உதவி பலரின் கவனத்திற்கு சென்று நிஜ வாழ்வில் ஒரு ஹீரோவாக புகழ் பெற்றார்.

    இவரை ஆதரித்து சமூக வலைத்தளம் மற்றும் பல வகையில் இவருக்காக பல ஹாஸ்டேக் மற்றும் இவரை பற்றிய தகவல்கள் இந்திய அளவில் வெளியாகி பிரபலமாகின. ஒரு இக்கட்டான நேரத்தில் ஆதரவற்றோருக்கு இவர் செய்த உதவி மூலம் இந்தியாவில் ஒரு முக்கிய பிரபலமாக புகழ் பெற்றுள்ளார்.

    8

    2019-ஆம் ஆண்டு பேட்ட திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான இவர், தனது அடுத்த படமாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக "மாஸ்டர்" திரைப்படத்தில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.

    சமூக வலைத்தளமான இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற இணையதள பக்கங்களில் இவர் பதிவேற்றும் இவரது புகைப்படங்கள் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று புகழ் பெற்றுள்ளார் மாளவிகா மோஹனன்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X