twitter
    X
    Home சினி தரவரிசை

    பிரபல தமிழ் படங்களின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் விலகிய முன்னணி நட்சத்திரங்கள்

    Author Sakthi Harinath | Updated: Tuesday, April 4, 2023, 09:29 AM [IST]

    திரைத்துறையில் பிரபலமாகி ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து புகழ் பெற்றுள்ள தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள் இழந்துள்ள சில ப்ளாக்பஸ்டர் படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. திரைப்பட இயக்குனர்களின் திரைக்கதையினை கேட்டறிந்து தயாரிப்பாளரின் ஒப்பந்தத்தில் படத்தின் படப்பிடிப்பினை தொடங்கி நடித்து வந்துள்ள நட்சத்திரங்கள் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விழகியுள்ளனர். இதற்கான காரணங்களும் அதிகாரப்பூர்வமாக சில தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டாலும் இன்னும் இதே போல் நடந்துள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் பணிகளுக்கான காரணங்களால் தெரியவில்லை. இந்த வரிசையில் விஜய், அஜித், திரிஷா என முன்னணி நடிகர்களும் தற்போது வளர்ந்து வரும் ஷாலினி பாண்டே போன்ற புதுமுக நட்சத்திரங்களும் இங்கு உள்ளனர்.

    cover image
    உன்னை நினைத்து

    உன்னை நினைத்து

    1

    உன்னை நினைத்து - இப்படத்தில் நாயகனாக முதலில் விஜய் நடித்து வந்துள்ளார். பின்னர் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விஜய் விலக சூர்யா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.

    ஆடுகளம்

    ஆடுகளம்

    2

    ஆடுகளம் - வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம், இப்படம் பெரிய அளவில் புகழ் பெற்று தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு மாபெரும் புகழ் மற்றும் விருதுகளை அள்ளித்தந்துள்ள திரைப்படம். இப்படத்தில் நாயகியாக திரிஷா பாதி காட்சிகளில் நடித்துவந்துள்ளார், பின்னர் திரிஷா இப்படப்பிடிப்பில் இருந்து விலக டாப்சீ நாயகியாக நடித்துள்ளார்.

    நேருக்கு நேர்

    நேருக்கு நேர்

    3

    நேருக்கு நேர் - விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் துணை நடிகராக முதலில் அஜித் நடித்து வந்துள்ளார், பின்னர் அஜித் இப்படத்தில் இருந்து விலக சூர்யா இப்படத்தில் இணைந்து இரண்டாம் கட்ட நாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமே நடிகர் சூர்யா நடிகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் படமாகும்.

    பிரெண்ட்ஸ்

    பிரெண்ட்ஸ்

    4

    ஃபிரண்ட்ஸ் - விஜய், சூர்யா, ரமேஷ் கன்னா நடிப்பில் உருவாகியுள்ள குடும்பத்திரைப்படம். இப்படம் பெரிய அளவில் வசூல் மற்றும் சாதனைகள் படைத்தது தமிழ் திரைத்துறையில் புகழ் பெற்றுள்ள படமாகும். இப்படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ஜோதிகா மாற்றம் சுவுலக்ஷ்மி நடித்துள்ளனர், பின்னர் இவர்கள் இருவரும் இப்படத்திலிருந்து விலக நாயகியாக தேவயானி, விஜயலக்ஷ்மி இப்படத்தில் நடித்துள்ளனர்.

    அச்சம் என்பது மடமையடா

    அச்சம் என்பது மடமையடா

    5

    அச்சம் என்பது மடமையடா - சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படம் முதலில் "சட்டென்று மாறுது வானிலை" என்ற தலைப்பில் சிம்பு - பல்லவி சுபேஸ் முன்னை கதாபாத்திரத்தில் உருவானது. நடிகை பல்லவி இப்படத்தில் இருந்து விலக மஜிமா மோகன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகினார், பின்னர் இப்படத்தின் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது.

    கஜினி

    கஜினி

    6

    கஜினி - இயக்குனர் எ ஆர் முருகதாஸ் - அஜித் கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட் ஆனா தீணா படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகியுள்ளது. ஆனால் அஜித் இப்படத்தினை தொடக்கத்திலையே நிராகரித்துள்ளார். பின்னர் சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.

    கோ

    கோ

    7

    கோ - சிம்பு முன்னணி நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம். இப்படத்திலிருந்து இவர் விலக ஜீவா நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் பெரிய அளவில் வெற்றியை பெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமானது. ஒரு வெற்றி வாய்ப்பினை இப்படத்தில் நடிகர் சிம்பு இழந்துள்ளார்.

    துருவ நட்சத்திரம்

    துருவ நட்சத்திரம்

    8

    துருவநட்சத்திரம் - விக்ரம், ராதிகா, டிடி, வம்சி என ஒரு திரைபட்டாளமே நடித்துள்ள அதிரடி திரைப்படம். இப்படத்தில் நடிகையாக முதலில் அணு இமானுவேல் நடித்துள்ளார். பின்னர் இவர் இப்படத்தில் இருந்து விலக இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

    எந்திரன்

    எந்திரன்

    9

    எந்திரன் - கமல் ஹாசன் நடிப்பில் அறிவியல் கற்பனைகள் கொண்டு உருவான திரைப்படம், இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்திலையே கமல் விலகியுள்ளார், பின்னர் நடிகர் ரஜினி நாயகனாக நடித்து வெற்றி கண்டுள்ளார். இப்படம் தமிழ் திரைத்துறையில் பெரிய அளவில் வெற்றியை கண்டுள்ளது.

    அக்னி நட்சத்திரம்

    அக்னி நட்சத்திரம்

    10

    அக்னி நட்சத்திரம் - அருண் விஜய், விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தில் நாயகியாக முதலில் ஷாலினி பாண்டே நடித்து வந்துள்ளார், இவருக்கு ஒரு ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும்  இப்படத்தில் இருந்து விலகி ஹிந்தி படத்தில் நடிக்க சென்றதால் இப்படத்தில் நாயகியாக அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

    நான் கடவுள்

    நான் கடவுள்

    11

    நான் கடவுள் - இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விமர்சன ரீதியாக மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். இப்படம் பல விருதுகளை வென்று குவித்துள்ளது. நடிகர் அஜித் இப்படத்தில் நாயகனாக சில காட்சிகள் நடித்த நிலையில் பின்னர் இப்படக்குழுவில் இருந்து வெளியேறினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X