X
தமிழ் » திரைப்படங்கள் » அச்சம் என்பது மடமையடா
அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

Comedy | Romance | 11 Nov 2016 | U | 135 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

அச்சம் என்பது மடமையடா கதை

அச்சம் என்பது மடமையடா கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு மற்றும்  மஜிமா மோகன் நடிப்பில் இசைப்புயல் எ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காதல் திரைப்படம். கதை : சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். அவரின் தங்கையின் தோழி மஜிமா சிம்புவின் வீட்டில் தங்கி படிக்கிறார். மஜிமா மீது சிம்புவிற்கு காதல் ஏற்படுகிறது.  ஒரு நாள் சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார், ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோதுகிறது. அந்த நிமிடம் முதல் சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது, பிறகு என்ன நடந்தது, எவ்வாறு அதிலிருந்து சிம்புவும் மஜிமாவும் தப்பித்தனர் என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன்.
Read More

அச்சம் என்பது மடமையடா நடிகர்கள் & படக்குழுவினர்

அச்சம் என்பது மடமையடா அணியின் தகவல்

இயக்குனர் கெளதம் மேனன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பாளர் கெளதம் மேனன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அச்சம் என்பது மடமையடா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா எடுக்கறோம்... ஆனா நீங்கள்லாம் கேக்கறதப் பார்த்தா ஏன்டா எடுத்தோம்னு கஷ்டமா இருக்கு' என்று சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் கவுதம் மேனன் பேசியிருந்தார். சரியான திட்டமிடல், பக்காவான திரைக்கதை, பொருத்தமான நட்சத்திரங்கள் என அனைத்தையும் ஒருமுகப்படுத்தி படம் எடுத்து, சரியான காலத்தில் வெளியிடுவது இன்றைக்கு யாருக்குமே பெரும் சவால்தான். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் சொதப்புவதைத்தான் பொறுக்க முடிவதில்லை. அச்சம் என்பது மடமையடா படம் அப்படியான சொதப்பல்களில் ஒன்று. கதை விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில்தான் ஆரம்பிக்கிறது. மெல்ல மெல்ல அது மகாராஷ்ட்ரா பார்டர் வரை போய், தாதாக்கள், போலீஸ் வில்லன்கள், துப்பாக்கிச் சண்டை, சிம்புவின் இரண்டரை வருட தலைமறைவு வாழ்க்கை, மொத்த க்ளைமாக்ஸையும் சிம்புவின் வாய்ஸ் ஓவரிலேயே முடித்துவிட்டிருக்கிறார் கவுதம் மேனன். சிம்புவிடம் கால்ஷீட் பெறுவதில் அவர் பட்ட கஷ்டம் புரிகிறது. கவுதம் மேனன் படங்களிலேயே இப்படியொரு மொக்கையான க்ளைமாக்ஸைப் பார்த்ததே இல்லை. சிம்புவை கொஞ்சம் அல்ல, ரொம்பவே அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார் கவுதம். அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். மற்ற படங்களை விட இதில் அவர் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் அவரது சைஸ் மாறிக் கொண்டே இருப்பதுதான் பெரும் உறுத்தல். மஞ்சிமா மோகன், கொஞ்சம் அனுஷ்கா சர்மாவின் சாயல். காற்றில் கூந்தல் அலைய சிரித்துக் கொண்டே இருக்கிறார் ஆரம்பத்தில். பின்னர் முகத்தில் ரத்தத் தீற்றல்களுடன் செயற்கையான பயத்தைக் காட்டுகிறார். அது நடிப்பு என்பது எளிதாகத் தெரிந்துவிடுகிறது. ஒரு காட்சியில் மருத்துவமனையிலிருந்து சாதாரண சுடிதாரில் வெளியில் வருவார் மஞ்சிமா. அதற்கு பார்வையாளர்களின் கமெண்ட்... 'இவ ஹீரோயினா... ஆஸ்பத்திரி ஆயாவா...' கவுண்டரை விட ஆபத்தான 'கமெண்டர்கள்' இந்த ரசிகர்கள்! ஹீரோ ஹீரோயின் தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. வேண்டுமானால் அந்த கோலாப்பூர் ஏரியா டாக்டரின் தவிப்பான நடிப்பைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். மொட்டைத் தலை வில்லன் (பாபா செகல்), எத்தனை முறை சுட்டாலும் எழுந்து வந்து கொண்டேருக்கும் டேனியல், நண்பனுக்காக உயிரை விட அந்த நண்பன்... யாரும் மனசில் நிற்கவில்லை. இன்னும் நன்றாக காட்சிகளைச் சிந்தித்திருக்கலாம். ஆரம்பத்தில் அந்த பைக் ரோட் ட்ரிப் காட்சிகளில் கொஞ்சம் கவிதையும் காதலும் வழிகின்றன. அதில் ஏ ஆர் ரஹ்மானுக்கும் பங்குண்டு. ஆனால் பிந்தைய காட்சிகளில் ரஹ்மானும் அம்பேல்! ரஹ்மானின் இசையில் அவளும் நானும், தள்ளிப் போகாதே பாடல்கள் கேட்க வைக்கின்றன. அவளும் நானும் பார்க்கவும் வைக்கிறது!

அச்சம் என்பது மடமையடா பாடல்கள்

அச்சம் என்பது மடமையடா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அச்சம் என்பது மடமையடா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+