»   »  மோடியின் அதிரடி அறிவிப்பால் சிம்பு படத்திற்கு வந்த சோதனை

மோடியின் அதிரடி அறிவிப்பால் சிம்பு படத்திற்கு வந்த சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கூறியுள்ள நிலையில் நாளை மறுநாள் வெளியாகும் படங்களின் வசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்க ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று வங்கிகளுக்கு விடுமுறை. ஏடிஎம் மையங்கள் இன்றும், நாளையும் செயல்படாது.


Modi's master stroke turns fatal for Simbu's movie?

இதனால் மக்கள் தங்கள் கையில் உள்ள சில்லறை பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டிய நிலை. இந்நிலையில் நாளை மறுநாள் அச்சம் என்பது மடமையடா, ஜி.வி. பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, வெங்கட் பிரபு இயக்கியுள்ள சென்னை 28 II, ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ள மீன்குழம்பும் மண்பானையும், விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ஆகிய 5 படங்கள் ரிலீஸாகின்றன.


மக்கள் கையில் உள்ள பணத்தை வைத்து அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவார்களே தவிர படம் பார்க்க செலவு செய்ய நினைக்க மாட்டார்கள். இதனால் நாளை மறுநாள் வெளியாகும் படங்களின் வசூல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.


சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஏற்கனவே தாமதமாக ரிலீஸாகும் நிலையில் தற்போது இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Modi's master stroke to curb black money has turned fatal for Simbu's Acham Yenbadhu Madamaiyada.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil