சோனு சூட்
Actor
பயோடேட்டா:
சோனு சூட் இந்திய திரைப்பட பிரபல முன்னணி நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் .ஆவார். 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமா மூலம் ஒரு நடிகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இந்திய அளவில் பல விருதுகளை வென்று புகழ் பெற்றுள்ளார். பிறப்பு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோக என்னும் நகரில் 1973-ஆம் ஆண்டு ஜூலை 30ல் பிறந்துள்ள இவர், தனது இளங்கலை பட்டத்தினை இன்ஜினியரிங் பிரிவில் படித்துள்ளார். தனது கல்வி ஆண்டிற்கு பின்னர் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடலிங் செய்து வந்துள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பினை பெற்று திரையுலகில் அறிமுகமானார். சோனு சூட், 1996-ஆம் ஆண்டு சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இஷாந்த் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். திரையுலக தொடக்கம் 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான " கள்ளழகர் " என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அதே ஆண்டு நடிகர் விஜய் நடித்த " நெஞ்சினிலே " திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தமிழ் படங்களின் மூலம் திரையுலகிற்கு வருகை தந்துள்ளார். சோனு சூட், 2000-ஆம் ஆண்டில் "ஹன்ட்ஸ் அப்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் தமிழில் சந்தித்த வேலை , மஜூனு , கோவில் பட்டி வீரலட்சுமி , ராஜா என பல படங்களில் நடித்து வந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம் என நடித்து வந்துள்ள சோனு, 2002-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பினை பெற்று ஹிந்தி திரைப்பட உலகில் நடிகனாக அறிமுகமானார். பிரபலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் வில்லன், குணசித்ரா கதாபாத்திரம் மற்றும் முக்கிய முன்னணி கதாபாத்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2008-ஆம் ஆண்டு " ஜோத அக்பர் " என்ற ஹிந்தி திரைப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக முதலில் பிலிம்பேர் சிறந்த துணை நடிகருக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். 2009-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெளியான " அருந்ததி " திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தினை பெற்று தந்தது. இபபடத்தில் இவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக பல்வேறு விருது அமைப்புகளில் பல விருதுகளை வென்றுள்ளார். இப்படமானது இவருக்கு திரைஉலகில் ஒரு முக்கிய படமாக புகழ் பெற்றது. பிரபல தமிழ் படங்கள் அருந்ததி ஒஸ்தி தேவி மஜூனு ராஜா புகழ் 2020-ஆம் ஆண்டு உலகளவில் வர்த்தக ரீதியாக மக்கள் கொரோன என்ற நோயினால் பாதிக்கப்பட்டு ஊரடங்கு, தனிமை படுத்தப்படுத்தல் என மக்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு இவர் பல உதவிகளை செய்துள்ளார். தின தொழில் ஊழியர்களுக்கும், கூலி தொழில் ஊழியர்களுக்கும் அவரவர் சொந்த இடங்களுக்கு இடங்களுக்கு செல்ல, அவர்களை தனது சொந்த செலவில் விமான மூலம் அவரவர் இடங்களுக்கு செல்ல உதவியுள்ளார். மும்பையில் உள்ள தனது சொந்த 5ஸ்டார் ஹோட்டலில் இடம் இல்லாமல் தவித்த ஏழைகளுக்கு தங்குவதற்காக இடம் அளித்து, உணவு அளித்து உதவியுள்ளார், பின் ஒரு ஏழை குடும்பம் விவசாயம் செய்வதற்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு ஒரு ட்ராக்ட்டர் வாங்கி பரிசளித்துள்ளார். இது போன்ற பல உதவிகளை தாமாக முன்வந்து செய்யும் குணம் கொண்டுள்ள இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் அன்பினை பெற்றுள்ளார்.
மேலும் படிக்க