X
டிமான்ட்டி காலனி 2
Drama | Horror | Thriller | 15 Aug 2024 | U/A | 144 Mins
Tamil

டிமான்ட்டி காலனி 2 கதை

டிமான்ட்டி காலனி 2 - இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை இப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ஞானமுத்து பட்டறை தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இவருடன் இணைந்து தயாரிப்பாளர் விஜய் சுப்ரமணியம் & தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் தங்களின் BTG யுனிவெர்சல் & வொயிட் நைட்ஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

திகில் - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் குமரேஷ் டி எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் அருள்நிதி நாயகனாக நடிக்க பிரியா பவானி ஷங்கர், வி ஜே அர்ச்சனா, அருண் பாண்டியன், ரெடின் கிங்ஸ்லி, ஷாரா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தினை BTG யுனிவெர்சல், வொயிட் நைட்ஸ் என்டர்டைன்மெண்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள நிலையில், இப்படத்தினை தமிழக அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.


 
டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் 2024 ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின ஸ்பெஷல் திரைப்படமாக திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
 
டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ 5 ஓடிடி தளம் கைப்பற்றியுள்ள நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான உரிமையை கைப்பற்றியுள்ளது.
 

டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் கதை

டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் முடிவில் அருள்நிதி அந்த பங்களாவில் இருந்து தப்பித்து ஓடும் காட்சியில் முடிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் அவர் இறப்பது போல இருந்தது.அதிலிருந்து டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தின் கதை தொடங்குகிறது.

முதல் பாகத்தின் ஹீரோ பேயிடம் மாட்டிக்கொள்வதில் இருந்து, பிரியா பவானி ஷங்கரின் வாழ்க்கையில் சில அமானுஷங்கள் நடக்க தொடங்குகிறது. பிரியா பவானி ஷங்கரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் இரண்டாம் பாக தொடக்கத்தில் காட்சியாக வடிவமைத்து படத்தின் கதையை தொடங்குகின்றனர்.

மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் ஹீரோ அருள்நிதி (சீனிவாசன்)-யை காப்பாற்ற முயற்சிக்கிறார், பிரியா பவானி ஷங்கர். அதே சமயத்தில் அருள்நிதி இறந்தால் தான் தந்தையின் சொத்துக்களை அடைய முடியும் என ரகுநந்தன் (மற்றொரு அருள்நிதி) நினைக்கிறார்.

அந்த சமயம் அருள்நிதி ஒரு காரணத்திற்காக உயிரோடு இருக்கவேண்டும் என்று ரகுநந்தன் (அண்ணன் அருள்நிதி)-யிடம் பேசி சமாளித்து, பிரியா பவானி ஷங்கர் - அண்ணன் அருள்நிதியை டிமான்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார். 

இதற்கு பின் திரைக்கதையில் நடக்கும் சுவாரஸ்ய திகில் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் 'டிமாண்டி காலனி 2' திரைப்படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+