X
முகப்பு சினி தரவரிசை

பிரபல தமிழ் நடிகைகளின் போலீசாக நடித்த திரைப்படங்கள்

Author Rajeswari Shankar | Published: Friday, March 7, 2025, 05:40 PM [IST]

தமிழ் சினிமாவில் வெளிவந்த வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள் அதிகம் இருந்தாலும் அதில் சில படங்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. சினிமாவில் கதாநாயகிகள் எப்பவுமே கியூட்டாக மட்டும் இல்லாமல் சில சமயங்களில் பவர்ரான ரோல்களை எடுத்து நடித்து அசத்தி உள்ளார்கள். அப்படி தமிழ் சினிமாவில் போலீசாக நடித்த ஹீரோயின்களைப் பற்றி இந்தப் பட்டியலில் காண்போம்.


cover image
இமைக்கா நொடிகள்
1

இமைக்கா நொடிகள் ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய திரில்லர் படமாகும், இது  2018 ஆம் ஆண்டு  வெளியானது, இந்த படத்தில் நயன்தாரா போலீஸ் ஆபீஸராக நடித்துள்ளார், விஜய்சேதுபதி அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப், பேபி மானஸ்வி, வினோத் கிஷன், ரமேஷ் திலக், தேவன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்துள்ளார். 

சைரன்
2

2024-ஆம் ஆண்டில் வெளிவந்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் தான் சைரன், ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தினை எழுதி மற்றும் இயக்கி உள்ளார். இதுவே இவரது முதல் படமாகும், ரவி மோகன், கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, அழகம் பெருமாள், சமுத்திரக்கனி மற்றும் அஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், சாம் சி  எஸ் என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். 

நாச்சியார்
3

2018 ஆம் ஆண்டில் வெளிவந்த க்ரைம் ஆக்சன் திரைப்படம் தான் நாச்சியார். இந்தப் படத்தினை இயக்குனர் பாலா எழுதி மட்டும் இயக்கி உள்ளார். ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இவானா ஆகியோர்  முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஜோதிகா ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜில்லா
4

ஜில்லா 2014ல் திரைக்கு வந்த ஆக்சன் டிராமா திரைப்படமாகும். இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஆர். டி. நீசன். மோகன் லால், விஜய், காஜல் அகர்வால், சூரி, மஹத், நிவேதா தாமஸ், சம்பத் ராஜ் மற்றும் பிரதீப் ராவத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்தனர். இந்த படத்தில் காஜல் அகர்வால் போலீசாக நடித்திருப்பார். டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

திமிரு புடிச்சவன்
5

2018 ஆம் ஆண்டு வெளிவந்த திமிரு புடிச்சவன் படத்தினை எழுதி மற்றும்  இயக்கியவர் கணேஷா. விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், சாய் தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நிவேதா பித்துராஜ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார் மற்றும் எடிட்டிங்கும் இவரை செய்துள்ளார். 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+