X
தமிழ் » திரைப்படங்கள் » நாச்சியார்
நாச்சியார்

நாச்சியார்

Drama | 16 Feb 2018 | U/A |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

நாச்சியார் கதை

நாச்சியார் இயக்குனர் பாலா இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார், ஜோதிகா நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை : உதவி ஆணையர்கள் ஜோதிகாவும் ராக்லைன் வெங்கடேஷும் 'ஒரு மைனர் ரேப் கேஸை'க் கையாள நேர்கிறது. கேஸில் தொடர்புடைய ஜிவி பிரகாஷ் - இவானா இருவருமே காதலர்கள். பதின்ம வயதின் எல்லையில் நிற்பவர்கள், விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பதினாறே வயதில் இவானா கருவுற்றிருக்கிறாள். வழக்கை விசாரிக்கும்போதுதான். அந்தக் கருவுக்கு யார் காரணம் என்பது தெரிகிறது. அவனைக் கண்டுபிடித்து என்ன செய்கிறார் நாச்சியார் என்பதுதான் மீதி.
Read More

நாச்சியார் நடிகர்கள் & படக்குழுவினர்

நாச்சியார் அணியின் தகவல்

இயக்குனர் பாலா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை இளையராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நாச்சியார் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஜோதிகாவுக்கு நேர்மையும் மனிதாபிமானமும் துணிச்சலும் நிறைந்த ஐபிஎஸ் அதிகாரி வேடம். அவர் 'பிய்த்து உதறியிருக்கிறார்' என்றெல்லாம் சொல்வது 'சிவாஜிக்கு நன்றாக நடிக்கத் தெரியும்' என்பதைப் போல வழக்கமான க்ளீஷே. சுருக்கமாக, மறுவரவில் ஜோதிகாவின் பெயர் சொல்லும் வேடம் இந்த நாச்சியார். ஜிவி பிரகாஷுக்கு நியாயமாக இதுதான் முதல் படம். அவர் இனி அப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும். காத்து பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இனி த்ரிஷா இல்லனா நயன்தாரா வர்ஜின் பாய் மாதிரி வேடங்கள் செய்தால் அவரைத் தேடி வந்து அடிப்பார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு முற்றிலும் வேறு ஜிவி பிரகாஷ். நல்ல முயற்சி, மாற்றம். அதைச் செய்ய பாலாவால்தான் முடியும். ஈஸ்வரின் ஒளிப்பதிவில் சென்னையின் மறுபக்கம், சட்ட - காவல் துறையின் இயல்புத் தன்மை கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. சதீஷ் சூர்யா எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளுக்கு பாலாவுடன் போராடி கத்தரி போட்டிருக்கலாம். ஆனால் ஒரு இடைவெளிக்குப் பிறகு பாலாவிடமிருந்து ஒரு பாஸிடிவ் க்ளைமாக்ஸ் படம் என்பதே பெரிய ஆறுதல்தான். ஆனால் இன்னும் எதிர்ப்பார்த்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

நாச்சியார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நாச்சியார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+