X
தமிழ் » திரைப்படங்கள் » இமைக்கா நொடிகள்
இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

Black comedy | 30 Aug 2018 | U/A | 170 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

இமைக்கா நொடிகள் கதை

இமைக்கா நொடிகள் டிமான்டி காலனி இணயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அதர்வா, அனுராக் கஷ்யப் மற்றும் நயன்தாரா நடித்த திரில்லர் திரைப்படம். கதை : பெங்களூரு நகரில் உள்ள முக்கிய புள்ளிகளின் பசங்கள கடத்தி பணம் கேட்டு கொலை செய்கிறான் சைக்கோ ருத்ரா (அனுராக் காஷ்யப்). அதுவும் சிபிஐக்கு நேரடியாக சவால்விட்டு அந்த கொலைகளை செய்கிறான். ருத்ராவை கண்டுப்பிடிக்க போராடுகிறார் சிபிஐ அதிகாரி அஞ்சலி (நயன்தாரா). ஐந்தாண்டுகளுக்கு முன்பே தன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட சைக்கோ கொலைகாரன் ருத்ரா மீண்டும் எப்படி வந்தான் என குழம்பித் தவிக்கிறார் அஞ்சலி. இதற்கிடையே சென்னையில் மருத்துவம் படித்துக்கொண்டும், லவ் பிரேக்கப்பால் தவித்துக்கொண்டும் இருக்கும் நயன்தாராவின் தம்பி அர்ஜுன் (அதர்வா), தனது காதலி ராஷி கண்ணாவை பார்க்க பெங்களூரு வருகிறார். ருத்ராவின் வலையில் சிக்கும் அர்ஜுனை, சைக்கோ கொலைகாரன் என நினைத்து கைது செய்கிறது சிபிஐ. இந்த சிக்கலில் இருந்து அதர்வா தப்பித்தாரா, ருத்ராவை அஞ்சலி பிடித்தாரா, யார் இந்த ருத்ரா போன்ற கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.
Read More

இமைக்கா நொடிகள் நடிகர்கள் & படக்குழுவினர்

இமைக்கா நொடிகள் அணியின் தகவல்

இயக்குனர் அஜய் ஞானமுத்து
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பாளர் ஜெயக்குமார் சி ஜே
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இமைக்கா நொடிகள் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
இந்த படத்தின் உண்மையான ஷோ ஸ்டீலர் அனுராக் காஷ்யப் தான். ஒவ்வொரு அசைவிலும் சைக்கோ ருத்ராவாக பயமுறுத்துகிறார். அதுவும் மகிழ்திருமேனியின் குரல் கனக்கச்சிதம். ஆரம்பம் முதல் இறுதி வரை நயன்தாராவையும், அதர்வாவையும் ஓடவைத்திருக்கிறார். நம்ம பாலிவுட் இயக்குனருக்கு தமிழில் இனி கால்ஷீட் பிரச்சினை வரும் போல. நயன்தாராவுக்கு சரிசமமாக தன்னுடையே வேலையையும் கச்சிதமாக செய்திருக்கிறார் அதர்வா. ஆக்ஷன் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதுவும் அந்த மருத்துமனை மாடியில் இருந்து குதித்து வரும் காட்சியிலும், சைக்கில் சேசிங் காட்சியிலும் பிண்ணி பெடலெடுத்திருக்கிறார். தெலுங்கில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகி இருக்கும் புதுவரவு ராஷி கண்ணாவுக்கு தவுசண்ட் லைக்ஸ். அழகு தேவதையாக வந்து அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்துவிட்டு காணாமல் போகிறார். உங்களுக்கும் கால்ஷீட் பிரச்சினை வர வாய்ப்பிருக்கு. இந்த படத்தின் இன்னொரு ஷோ ஸ்டீலர் குட்டிப்பாப்பா ஷாலு. செம க்யூட் பேபி. அதேபோல படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். ருத்ரா ஒரு பெரிய சைக்கோ கொலைகாரனாக இருக்கலாம். அதற்காக நேரடியாக தொலைக்காட்சிக்கு போன் செய்து அடுத்தக்கடத்தல் குறித்து லைவ் அப்பேட் செய்வது, ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் ஸ்டேஷனையும் ஹேக் செய்வது எல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். ஒரு தனி ஆளை கண்டுப்பிடிக்கக்கூட முடியாத அளவுக்காக சிபிஐ இருக்கிறது. அப்படின்னா நம்ம அரசியல் தலைவர்கள் எல்லாம் ஆவுன்னா சிபிஐ விசாரணை வேணும்னு கேட்கிறது வேஸ்ட் போலயே. நாங்க சொல்றது சாம்பிள் தான் இயக்குனரே. ஒரு சிபிஐ அதிகாரி நினைத்தால், 'அந்த பசங்கல' அப்படி தான் பழிவாங்கனுமா என்ன... எடிட்டரின் கத்திரி, இன்னும் கூட பல காட்சிகளை டிரிம் செய்திருக்கலாம். இப்போல்லாம் யாரு பாஸ் 3 மணி நேரம் படம் பார்க்குறாங்க.

இமைக்கா நொடிகள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இமைக்கா நொடிகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+