கல்கி 2898 AD - கல்கி2898 AD - கதை
கல்கி 2898 AD திரைப்படத்தின் கதை மஹாபாரதம் போரில் தொடங்குகிறது. குருச்சேத்திர போர் முடிவில் கிருஷ்ணனிடம் சாகாவரம் மற்றும் சாபத்தை பெற்ற அஸ்வத்தாமன் கலியுகம் முழுவதும் வாழ்ந்து கிருஷ்ணனின் 10வது அவதாரத்திற்காக காத்திருக்கிறார்.
2898 ஆண்டுகளில் இந்தியாவில் எஞ்சிய நகரமான காசியில் கமல் ஹாசன் (யாஸ்கின்) என்று தன்னை கடவுளாக சித்தரித்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு முக்கோண பிரிமைட்-யை தலைகீழாக வைத்து இயற்கையை மறைத்து வைத்துள்ளார். மன்னர் கால ஆட்சி போல மனிதர்கள் வாழும் நிலையில், மனிதர்கள் காசிற்கு பதில் யூனிட் போன்ற மின்சார சார்ந்த அறிவியலை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு பவுண்டி வீரராக இருக்கும் பிரபாஸ், காம்ப்ளெக்ஸ் என்னும் இடத்திற்கு போக விரும்புகிறார். இதற்காக கடினமாக உழைத்து வரும் இவர், பல சண்டைகள் மற்றும் திருட்டு என பல விஷயங்கள் செய்து வாழ்ந்து வருகிறார்.
நடிகர் தீபிகா படுகோன் காம்ப்ளெக்ஸ் இடத்தில் இருந்து தப்பி வருகிறார். 5 மாத குழந்தையை சுமக்கும் இவர், அங்கிருந்து தப்பித்த இவரை காப்பாற்றி நடிகர் பசுபதி சம்பா என்ற இடத்திற்கு அழைத்து வருகிறார். இடையில் தீபிகா படுகோன்யை பிடித்து கொடுத்தால் காம்ப்ளெக்ஸ் இடத்திற்கு செல்ல முடியும் என நினைத்து பிரபாஸ் அவரை பிடிக்கும் முயற்சியில் துரத்துகிறார்.
குருச்சேத்திர போர் முடிவில்கங்கை நதி முற்றிலுமாக வத்தி போனதும், உனது ரத்னம் கல் ஜொலிக்கும் என கிருஷ்ணன் அஸ்வத்தமானமிடம் சொன்ன வார்த்தைகள் உண்மையானதும், அஸ்வத்தாமன் கல்கி அவதாரம் வரப்போகிறது என உணர்கிறார். இதற்காக தீபிகா படுகோன்யை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார், அஸ்வத்தாமன்.
அஸ்வத்தாமன் உடன் மோதி தோற்கடிக்க படும் பிரபாஸ், அஸ்வத்தாமன் சென்ற இடத்திற்கு ஒருவரை ஏமாற்றி சூழ்ச்சி செய்து போகிறார். பின் அங்கு மீண்டும் யுத்தம் தொடங்குகிறது. தீபிகா படுகோன்யை காப்பற்ற அஸ்வத்தாமன் முயற்சித்தும், எதிரிகள் தீபிகாவை கடத்துகின்றனர். அஸ்வத்தாமன் கையில் இருக்கும் கோல் விஜய தனுஷ் ஆகும்.
விஜய தனுஷை தொட்டதும் பிரபாஸ் மஹாபாரத கர்ணனாக மாறுகிறார். பின் பிரபாஸ் அங்கிருந்து தீபிகாவுடன் தப்பி செல்கிறார். இதற்கிடையில் இப்படத்தின் வில்லனான கமல் ஹாசன் மீண்டும் பலம் உடையவராக எழுந்து தீபிகாவை அழித்து கிருஷ்ணனின் கல்கி அவதாரத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதுடன் கல்கி முதல் பாகம் முடிவுக்கு வந்துள்ளது