இமைக்கா நொடிகள் டிமான்டி காலனி இணயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அதர்வா, அனுராக் கஷ்யப் மற்றும் நயன்தாரா நடித்த திரில்லர் திரைப்படம்.
கதை :
பெங்களூரு நகரில் உள்ள முக்கிய புள்ளிகளின் பசங்கள கடத்தி பணம் கேட்டு கொலை செய்கிறான் சைக்கோ ருத்ரா (அனுராக் காஷ்யப்). அதுவும் சிபிஐக்கு நேரடியாக சவால்விட்டு அந்த கொலைகளை செய்கிறான். ருத்ராவை கண்டுப்பிடிக்க போராடுகிறார் சிபிஐ அதிகாரி அஞ்சலி (நயன்தாரா). ஐந்தாண்டுகளுக்கு முன்பே தன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட சைக்கோ கொலைகாரன் ருத்ரா மீண்டும் எப்படி வந்தான் என குழம்பித் தவிக்கிறார் அஞ்சலி.
இதற்கிடையே சென்னையில் மருத்துவம் படித்துக்கொண்டும், லவ் பிரேக்கப்பால் தவித்துக்கொண்டும் இருக்கும் நயன்தாராவின் தம்பி அர்ஜுன் (அதர்வா), தனது காதலி ராஷி கண்ணாவை பார்க்க பெங்களூரு வருகிறார். ருத்ராவின் வலையில் சிக்கும் அர்ஜுனை, சைக்கோ கொலைகாரன் என நினைத்து கைது செய்கிறது சிபிஐ. இந்த சிக்கலில் இருந்து அதர்வா தப்பித்தாரா, ருத்ராவை அஞ்சலி பிடித்தாரா, யார் இந்த ருத்ரா போன்ற கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.