twitter
    X
    Home சினி தரவரிசை

    வசூலில் ₹100 கோடிகளை கடந்த நடிகர் கார்த்தி-யின் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, May 24, 2023, 10:35 AM [IST]

    கார்த்தி, தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ₹ 100 கோடிகள் கடந்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. லோகேஷ் இயக்கிய கைதி, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், பி எஸ் மித்ரன் இயக்கிய சர்தார் என நடிகர் கார்த்தியின் திரைவாழ்வில் இவர் நடித்து ₹ 100 கோடிகள் வசூல் கடந்துள்ள திரைப்படங்கள் மட்டுமே இங்கு உள்ளன.

    cover image
    தோழா

    தோழா

    1

    தோழா - இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகர்ஜுனா & கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டு வெளியானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு தெலுங்கு சினிமாவில் ஒரு மார்க்கெட் உருவானது. தற்போது தெலுங்கு சினிமாவிலும் கார்த்தியின் திரைப்படங்கள் வசூலை அள்ளுகிறது.

    கைதி

    கைதி

    2

    கைதி - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் - அதிரடி திரைப்படம். இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து கைதி திரைப்படம் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து கைதி இரண்டாம் பாகம் பெரிய அளவில் உருவாகிறது. கைதி திரைப்படம் நாயகி மற்றும் பாடல்கள் இல்லாமல் ஒரு ஹாலிவுட் பட பாணியில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. 20 கோடி பட்ஜெட்-ல் கைதி திரைப்படம் உருவாகி, 100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    பொன்னியின் செல்வன் (PS 1)

    பொன்னியின் செல்வன் (PS 1)

    3

    பொன்னியின் செல்வன் (முதல் பாகம்) - இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா என நடிகர் பட்டாளமே நடித்துள்ள தமிழர்களின் வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படம். இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவாகி உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகியது. இப்படம் உலகளவில் ₹ 500 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ₹200 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    சர்தார்

    சர்தார்

    4

    சர்தார் - பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடத்தில் நடித்துள்ள திரைப்படம். இப்படம் 2022 தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வெளியானது. முதலில் கலவையான விமர்சனங்கள் பெற்ற இந்த திரைப்படம், பின் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அள்ளியது. இத்திரைப்படம் ₹ 100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் திரைப்படம் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது. சர்தார் 2 பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு இணையத்தில் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது.

    பொன்னியின் செல்வன் 2

    பொன்னியின் செல்வன் 2

    5

    பொன்னியின் செல்வன் 2 - இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து உருவாகியுள்ள திரைப்படம். இப்படம் உலகளவில் 300 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X