X
சர்தார்

சர்தார்

Action | 21 Oct 2022 | U/A | 165 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

சர்தார் கதை

சர்தார் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்திருக்கும் த்ரில்லர் & அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தனது 'ப்ரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். சர்தார் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்கள் ஏற்று முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ராசி கண்ணா, ராஜீஷா விஜயன், லைலா, இளவரசு, முரளி சர்மா, முனீஷ்காந்த் ராமதாஸ் என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். சர்தார் படத்தினை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தினை உலகமுழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ' ரெட் கெய்ன்ட் மூவிஸ் ' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. சர்தார் திரைப்படம் 2022, அக்டோபர் 21ல் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு /எ ' சான்றிதழ் அளித்துள்ளது. சர்தார் திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள் சர்தார் திரைப்படத்தின் புகைப்படங்கள் சர்தார் திரைப்படத்தின் டீசர், டிரெய்லர் & பாடல் வீடியோக்கள் சர்தார் திரைப்படத்தின் கதை கதைக்கரு நாட்டின் ரகசிய ஒற்றனாக இருக்கும் சர்தார் (கார்த்தி) தான் சென்ற இடத்தில் பிடிபட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கார்த்தியின் (சர்தார்) மகன் ஒரு காவலராக பணியாற்றி வருகிறார். வெளிநாட்டு சிறையில் இருந்து சர்தார் தப்பித்து இந்திய வருகிறார். பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்கரு. கதை இன்ஸ்பெக்டர் விஜய பிரகாஷ் (கார்த்தி) ஒரு விளம்பர வெறி கொண்ட போலீஸ் அதிகாரி, இவர் சமூக வலைத்தளங்களில் பலரால் கொண்டாடப்படும் பிரபலம் ஆவார். இவருக்கும் வழக்கறிஞரான ஷாலினி (ராசி கண்ணா)-விற்கும் இடையே காதல் மலர்கிறது. இந்திய உளவுத்துறை அமைப்புகளின் இராணுவ ரகசியங்களைக் கொண்ட ஒரு கோப்பு (File) சிலரால் திருடப்படுகிறது. அதனை மீட்டெடுத்தால் இந்திய அளவில் தான் பிரபலமாகலாம் என நினைத்து, மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார், காவலர் கார்த்தி. கார்த்தியின் அக்கா கதாபாத்திரத்தில் லைலா நடித்துள்ளார். இவர் ஒரு சமூக போராளி போன்று கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக பல விஷயங்கள் செய்து வருகிறார். இதற்காக எதிரிகள் லைலாவை கொலை செய்கின்றனர். போஸ் எனும் நாடக கலைஞராக வெளி உலகத்துக்கு தெரியும் அப்பா கார்த்தி மறைமுக சீக்ரெட் ஏஜெண்ட் சர்தார். இவர் ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தப்பித்து இந்திய வரும் கார்த்தி-க்கு பல பிரச்சனைகள் வருகிறது. இறுதியில் ஒன் இந்தியா ஒன் பைப் லைன் என வில்லன் டீம் செய்யும் மோசடியை எப்படி அப்பா கார்த்தியும் மகன் கார்த்தியும் இணைந்து தடுக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை. சர்தார் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை, ஹீரோ படங்களுக்கு பின் உருவாகும் திரைப்படமாகும், சர்தார். இப்படத்தினை ஒரு அதிரடி - திரில்லர் திரைக்கதையில் வடிவமைத்துள்ளார், இயக்குனர். காஷ்மோரா, கைதி படங்களுக்கு பின் கார்த்தியின் சர்தார் திரைப்படம் 2022 தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் ராசி கண்ணா, முனீஷ்காந்த், லைலா, இளவரசு என பலர் நடித்துள்ளனர். 16 வருட இடைவேளைக்கு பிறகு நடிகை லைலா இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார். ஓடிடி & தொலைக்காட்சி சர்தார் படத்தின் ஆன்லைன் ஓடிடி தள ஸ்ட்ரீமிங் உரிமையை 'ஆஹா' நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புவதற்கான உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
Read More

சர்தார் நடிகர்கள் & படக்குழுவினர்

சர்தார் அணியின் தகவல்

இயக்குனர் மித்ரன் பி எஸ்
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
தொகுப்பாளர் அன்டனி ரூபன்
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சர்தார் விமர்சகர்களின் விமர்சனம்

மாலை மலர்
மொத்ததில் சர்தார் - மிரட்டல்.
தினமலர் - சினிமா
சர்தார் - உண்மை உளவாளி
ABP திரைவிமர்சனம்
கொஞ்சம் கத்திரியை இன்னும் இறுக்கிப் பிடித்திருந்தால், சர்தார், இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
நியூஸ் 18
கைதி தீபாவளியை போல சர்தார் தீபாவளியும் கார்த்திக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.
ஜீ நியூஸ்
தீபாவளி அன்று குடும்பத்துடன் என்ஜாய் பண்ணும் விதமாக சர்தார் படம் அமைந்துள்ளது. சர்தார் சபாஷ்.

சர்தார் ட்ரெய்லர்

Video Thumbnail

சர்தார் பாடல்கள்

சர்தார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சர்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+