டிக்கிலோனா இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை சோல்டர்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சந்தானம் (மாப்பிள்ளை மணி, இ.பி.மணி மற்றும் ஹாக்கி மணி) என மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடன் அனகா, ஷிரின், ஆனந்தராஜ், ராமதாஸ், மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சந்தானத்தின் நகைச்சுவை கலாட்டாவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அர்வி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜோமின் எடிட்டிங் செய்துள்ளார். டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஆன்லைன் ஓடிடி தளத்தில் 2021 செப்டம்பர் 10 தேதி ஜீ 5 நிறுவனத்தின் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டிக்கிலோனா திரைப்படத்தின் கதை
கதைக்கரு: தான் வாழும் வாழ்க்கையில் திருப்தி இல்லை என டைம் ட்ராவல் செய்து, தனது வாழ்க்கையை சரி செய்ய விரும்பும் நாயகன் புதிதாக பல பிரச்சனைகளை சந்திக்கிறார். அதற்காக அவர் எடுக்கும் முடிவுகளே இப்படத்தின் கதை.
கதை
இ.பி மணி (சந்தானம்) தான் காதலித்த நிவேதா (அனகா)-வை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவரால் சந்தோசமாக வாழ முடியவில்லை. பல பிரச்சனைகளை தினதோறும் சந்தித்து வருகிறார். இதனால் தனது மனைவியையும் தனது திருமண வாழ்க்கையையும் வெறுத்து கடந்த காலத்திற்கு சென்று தனது திருமணத்தை நிறுத்துகிறார்.
அதன் பின் அனகாவின் தோழியான மேக்னா (ஷெரின்)-யை திருமணம் செய்து கொள்கிறார், சந்தானம். இந்த வாழ்க்கையில் தான் ஆசைப்படி ஒரு ஹாக்கி வீரராக இவர் புகழ் பெற்றாலும், இந்த வாழ்க்கையிலும் சில குறை நிறைகள் நிறைய இருக்கின்றன.
சில சூழ்நிலையில் வாழ்க்கையின் அர்த்தத்தையும் காதலையும் உணரும் சந்தானம், பின் என்ன முடிவு செய்தார் என்பதே இப்படத்தின் கதை.
ஆன்லைன் ஓடிடியில் டிக்கிலோனா
டிக்கிலோனா திரைப்படம் 2021 செப் 10ல் நேரடியாக ஆன்லைன் ஓடிடி தளமான ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நகைச்சுவை கலாட்டாவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றி பெற்ற திரைப்படமாகும்.