டூலிட்டில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டெபன் கஃகான் இயக்கத்தில் ராபர்ட் டௌனே ஜே.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவையான திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் ராபர்ட் டௌனே திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஆர் கே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையையமைப்பாளர் டேனி எல்ஃமேன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கற்பனை மற்றும் நகைச்சுவை நிறைந்த சாகச படமாக உருவாகும் இத்திரைப்படத்தினை ஒளிப்பதிவாளர் குல்லெர்மோ நவரரோ ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் நிக் மூர் மற்றும் கிரேக் அல்பெர்ட் எடிட்டிங் பணிசெய்துள்ளார். இப்படத்தினை ஆர் கே பிலிம்ஸ் மற்றும் டீம் டௌனே ப்ரோடுச்டின் நிறுவனம் இணைந்து தயாரிக்க, யூனிவேர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தினை உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது.