டிரைவர் ஜமுனா இயக்குனர் கின்ச்ளின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் கதை
கார் டிரைவரான ஜமுனாவின் அப்பா கொலை செய்யப்பட ஊதாரியாக இருந்து வீட்டை விட்டு ஓடிவிட்ட சகோதரன் உதவாமல் போனதால் உடல் நலம் சரியில்லாமல் தவிக்கும் அம்மாவை காப்பாற்ற கார் டிரைவராக மாறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவரது காரில் ஏறிக் கொண்டு கூலிப்படை கூட்டம் எக்ஸ் எம்.எல்.ஏவான ஆடுகளம் நரேனை கொல்ல நினைக்கும் நிலையில், அவர்களை துரத்தும் போலீஸ் மற்றும் அந்த கூலிப்படை என இரு முனை கத்திகளிடம் இருந்து டிரைவர் ஜமுனா எப்படி தப்பித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.