எம்பிரான் இயக்குனர் கிருஷ்ணா பாண்டி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் ரெஜித் மேனன், ராதிகா ப்ரீத்தி நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரசன்னா இசையமைத்துள்ளார்.
கதை
சிறுவயதினில் தாய், தந்தையை இழந்த இப்படத்தின் நாயகி ராதிகா ப்ரீத்தி தனது தாத்தா மௌலி இடம் வளர்கிறார். இவர் டாக்டராக பணிபுரியும் ரெஜித் மேனன்-ஐ ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவ்விஷயமானது தாத்தா மௌலிக்கும் தெரியவருகிறது. பின்னர் ஓர் விபத்தின் காரணமாக மௌலி உயிரிழக்க, ராதிகா ப்ரீத்தி சுயநினைவை இழக்கிறார். இதனை தொடர்ந்து இப்படத்தின் நாயகன் ரெஜித் மேனன் கனவில் ஒரு தாத்தா அவர் பேத்தியுடன் வருவது போன்ற காட்சிகள் வருகின்றன. இதனை கண்டறிய இவர் முயிற்சித்துக்கொண்டும், சுயநினைவை இழந்த ராதிகா ப்ரீத்தி-ஐ கவனித்துக்கொள்கிறார்.
இறுதியில் இவர் கனவின் பின்னணி என்ன? சுயநினைவை இழந்த ராதிகா ப்ரீத்தி நினைவுற்றாரா? படத்தின் நாயகன் மற்றும் நாயகி எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.