X
தமிழ் » திரைப்படங்கள் » எம்பிரான்
எம்பிரான்

எம்பிரான்

Romance | 22 Mar 2019 | U | 122 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

எம்பிரான் கதை

எம்பிரான் இயக்குனர் கிருஷ்ணா பாண்டி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள்  ரெஜித் மேனன்,  ராதிகா ப்ரீத்தி  நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரசன்னா இசையமைத்துள்ளார். கதை சிறுவயதினில் தாய், தந்தையை இழந்த இப்படத்தின் நாயகி ராதிகா ப்ரீத்தி தனது தாத்தா மௌலி இடம் வளர்கிறார்.  இவர்  டாக்டராக பணிபுரியும் ரெஜித் மேனன்-ஐ ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவ்விஷயமானது தாத்தா மௌலிக்கும் தெரியவருகிறது. பின்னர் ஓர் விபத்தின் காரணமாக மௌலி உயிரிழக்க, ராதிகா ப்ரீத்தி சுயநினைவை இழக்கிறார். இதனை தொடர்ந்து இப்படத்தின் நாயகன் ரெஜித் மேனன் கனவில் ஒரு தாத்தா அவர் பேத்தியுடன் வருவது போன்ற காட்சிகள் வருகின்றன. இதனை கண்டறிய  இவர்  முயிற்சித்துக்கொண்டும், சுயநினைவை இழந்த ராதிகா ப்ரீத்தி-ஐ கவனித்துக்கொள்கிறார்.  இறுதியில் இவர் கனவின் பின்னணி என்ன? சுயநினைவை இழந்த ராதிகா ப்ரீத்தி நினைவுற்றாரா? படத்தின் நாயகன் மற்றும் நாயகி எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
Read More

எம்பிரான் நடிகர்கள் & படக்குழுவினர்

எம்பிரான் அணியின் தகவல்

இயக்குனர் கிருஷ்ணா பாண்டி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

எம்பிரான் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு புதிய யோசனையுடன், அழகான ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் கிருஷ்ணா பாண்டி. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும் அருமை. குறிப்பாக, காதலை ஆபாசம் இல்லாமல், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், கண்ணியமான ஒரு படத்தை தந்ததற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். நம் வீட்டு பெரியவர்கள், இறந்த பிறகும் கூட நம்மிடம் எப்படி பாசமாக நடந்து கொள்கிறார்கள், நமக்கு வரப்போகும் ஆபத்தை எப்படி தெரியப்படுத்துகிறார்கள் என்பதை ஒரு புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறார்கள். கோரமான உருவங்களை கொண்ட பேய் படமாக இல்லாமல், கனவு என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு, காதல் திரில்லர் படமாக எம்பிரானை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக காமெடிக்காக ராதிகா செய்யும் சில வேலைகள் முதலில் ரசிக்க வைத்தாலும், பின்னர் அதுதொடர்ந்து கொண்டே இருப்பதால் போரடிக்க ஆரம்பித்து விடுகிறுது. படத்துடனோ அல்லது தனியாகவோ காமெடி டிராக் வைத்திருந்தால் படத்தின் சுவாரஸ்யம் அதிகமாகி இருக்கும். இரண்டாம் பாதியில் வரும் கனவு சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே திரில்லிங் அனுபவத்தை தருகிறது. இருப்பினும், குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய 'எம்பிரான்' கவனம் ஈர்க்கும் படம்.

எம்பிரான் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

எம்பிரான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+