X
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா
Tamil

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா கதை

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா (Fast & Furious 9 (F9): The Fast Saga) ஹாலிவுட் திரையுலகில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் திரைப்பட தொடரில் பிரபலமான வாகன ரேஸ் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஜஸ்டின் லின் இயக்கத்தில், இப்படத்தின் முந்திய பாகங்களில் நாயகனாக நடித்திருக்கும் வின் டீசல் முன்னணி கதாபாத்திரத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 

படக்குழு பற்றிய தகவல்கள்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்பட தொடரில் தொடர்ந்து நடித்து வரும் மிக்ஹெல்ல ரோட்ரிகுயஸ், டிரெஸ் கிப்ஸன், கிறிஸ் லூடகிரிஸ் பிரிட்ஜெஸ், ஜோர்டான பிரேவ்ஸ்ட்டர், நத்தாலி இம்மானுயல், சுங் காங் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபல ரஸ்டலிங் வீரரான ஜான் சீன இப்படத்தில் நடித்து ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படக்குழுவில் இணைந்திருப்பது இப்படத்திற்கு உள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் சுவாரஸ்யங்கள் அதிகரித்துள்ளது.

அறிவியல் சார்ந்த புனைவு படமாகவும், அதிரடி படமாகவும் உருவாகியுள்ள இப்படத்தினை சோனி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நீல் ஹச் மோரிட்ஸ் மற்றும் இப்படத்தின் நாயகன் வின் டீசல் இணைந்து தயாரித்துள்ளனர்.

'ஒன் ரேஸ் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரித்த படக்குழு, 'யூனிவேர்சல் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 படத்தினை விநியோகம் செய்துள்ளது. இப்படம் உலகம் முழுக்க 2020 மே மாதம் 22ல் வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்

ஹாலிவுட் திரையுலகில் உலகம் முழுக்க பல ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களில் முக்கிய படமாகும் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக பல படங்கள் சுவாரஸ்ய திரைக்கதை மற்றும் அதிரடி காட்சிகள் கொண்டு வெளியாகி மக்களின் ஆதரவில் புகழ் பெற்றுள்ளது. டேனியல் கேசி என்ற பிரபல ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். 

தி ஃபாஸ்ட் சகா படத்தின் கதை

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8-ஆம் பாகத்தில் வில்லியாக இருந்த சார்லி திரான் (சைபர்) அந்த பாகத்தில் இப்படத்தின் நாயகன் வின் டீசல் (டொமினிக் டோரேட்டோ) என்பவறின் குழந்தை மற்றும் காதலியை கடத்தி இவரை மிரட்டி அரசாங்கத்திற்கு எதிரான சில விஷயங்களை செய்து வந்த இவரை, நாயகன் வின் டீசல் ஏமாற்றி வில்லியிடம் இருந்து நாயகன் தனது குழந்தையுடன் தப்பிப்பதே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8-ஆம் பாகத்தின் கதை.

அப்படத்தின் தொடர்ச்சியாக நாயகனின் தம்பியை (ஜான் சீன) நாயகனுக்கு எதிராக அனுப்புகிறார் வில்லி, சார்லி திரான் (சைபர்). நாயகன் மற்றும் அவரது குழுவை கொல்ல நினைக்கும் எதிரியாக ஜான் சீன வருகிறார். வில்லனிடம் இருந்து தனது குழுவையம், தம்பியையும் எப்படி நாயகன் வின் டீசல் (டொமினிக் டோரேட்டோ) காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் திரைக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+