பிரண்ட்ஷிப் இயக்குனர் ஜான் பால் ராஜ் மற்றும் இயக்குனர் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜே.பி.ஆர் மற்றும் ஸ்டாலின் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாகவும், 2019 தமிழ் பிக்பாஸ்-3 புகழ் லொஸ்லியா நாயகியாகவும் நடித்து தனது தமிழ் திரைப்பயணத்தை இப்படத்தின் மூலம் தொடங்கியுள்ளனர்.
இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு 2020 பிப்ரவரி 3ல் இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.