கருடன் - இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கருடன் திரைப்படம் 2024 மே 31ல் உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
கருடன் திரைப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதி உள்ளார். விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சூர், இப்படத்தில் மீண்டும் நாயகன் அவதாரம் எடுத்துள்ளார். வெற்றிமாறனின் துணை இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷ்ணி ஹரிப்ரியன் இப்படத்தில் நாயகியாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
கருடன் திரைப்படத்தின் கதை
தேனி மாவட்டம் கோம்பை என்னும் கிராமத்தில் உயிர் நண்பர்களாக வளர்கின்றனர், ஆதி (சசிகுமார்) & கர்ணா (உன்னி முகுந்தன்). இவர்கள் இணைந்து செங்கல் சூளை தொழில் செய்து வருகின்றனர். கோம்பையில் உள்ள ஒரு அம்மன் கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதி ஆர் வி உதயகுமார் (சின்ன கவுண்டர் பட இயக்குனர்), மைம் கோபி மற்றும் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி உதவியுடன் தனது திட்டத்தை நகர்த்துகிறார்.
கோவில் பற்றிய அணைந்து பத்திர சான்றிதழ் முழுவதையும் வடிவுக்கரசி குடும்பம் பராமரித்து வருகிறது. இப்படத்தின் நாயகன் சூரி 'சொக்கன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கர்ணன் (உன்னி முகுந்தன்) சிறுவயதில் ஒரு ஆபத்தில் இருந்து சூரி காப்பாற்ற, அந்த நொடி முதல் சூரி கர்ணனின் நண்பனாகவும், பாதுகாவலனாக மாறுகிறார். மிகுந்த விஸ்வாசத்துடன் இருக்கும் சூரி, கர்ணன்யை பல திசைகளில் இருந்து பாதுகாத்து வருகிறார்.
காலபோக்கில் சூரி - சசி குமார் - உன்னி முகுந்தன் மூவரும் நண்பர்களாக மாறுகின்றனர். இவர்களை தாண்டி கோவில் நிலத்தை அபகரிக்க முடியாமல் இருக்கும் அரசியல்வாதி, சூழ்ச்சி செய்து உன்னி முகுந்தன் - சசி குமார் இடையே இருக்கும் நட்பை உடைக்க திட்டமிட்டு, நண்பர்களை எதிரிகளாக மாற்றுகின்றார்.
தனது மனைவி தூண்டுததால் நண்பன் துரோகியாக மாறுகிறார், உன்னி முகுந்தன். இவர் செய்யும் தவறுகளுக்கு சூரி என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
தவறென அறிந்தும் உன்னி முகுந்தன் பக்கம் நின்றாரா? சூரி. இல்லை உன்னி முகுந்தனை எதிர்த்து நிற்கிறாரா? என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.