கெத்து தமிழ் அதிரடி மற்றும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை மான் கராத்தே புகழ் திருக்குமரன் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் அதிரடி அவதாரம் எடுத்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
கதை :
சத்தியராஜ் குமுளியில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவருகிறார். அவர் எந்த சூழ்நிலையிலையும் தன் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவர். அவருக்கு மிகவும் சாதுவான மகனாக வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
சத்யராஜ் பணியாற்றும் பள்ளிக்கு அருகாமயில் வில்லன் மைம் கோபியின் ஒயின் ஷாப் உள்ளது. அதனை மூட கோரி சத்யராஜ் போலீஸ்லில் புகார் அளிக்க, மைம் கோபியின் ஆட்கள் சத்யராஜ்யை தாக்குகின்றனர். தந்தைக்காக அதிரடியில் களமிறங்குகிறார் உதயநிதி.
குமுளியில் ஓர் அருவியின் அடியில் மைம் கோபி பிணமாக கிடக்க, அந்த பலி சத்யராஜ் மீது விழுகிறது. போலீஸ் சத்யராஜ்யை கைது செய்கின்றனர். தன் தந்தையை மீட்க உதயநிதி முயற்சிக்கும் பொது விக்ராந்த் தடுப்பு சுவராக வருகிறார். விக்ராந்த் ஏன் கொலை வழக்கில் வருகிறார்..? அதன் பின்னணி என்ன..? உதயநிதி தன் தந்தையை கொலை பழியிலிருந்து விடுவித்தாரா..? என்று விறுவிறுப்பாக கதை நகர்வதையும் அதன் முடிவையும் திரையில் பாருங்கள்.