கொரில்லா இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் நகைச்சுவையான திரில்லர் திரைப்படம். இத்திரைப்பிடத்தினை தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திர தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஆர் பி குருதேவ் மற்றும் படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் பணியில் உருவான இத்திரைப்படத்தில் (சிம்பான்சி) மனித குரங்கு ஒன்றினை நடிக்க வைத்துள்ளனர் படக்குழுவினர்.
திரைப்படத்தினை பற்றிய தகவல்கள்
இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்பான்சி குரங்கு நடித்த அணைத்து காட்சிகளும் தாய்லாந்து நாட்டில் அது வாழும் பகுதிகளில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மருத்துவர் மற்றும் குரங்கின் பயிற்சியாளரின் துணை கொண்டே பணியாயிருள்ளனர் படக்குழுவினர்.
கதை
சிறு சிறு திருட்டு வேலைகளை செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார் இப்படத்தின் நாயகன் ஜீவா. இவருடன் வேலையிழந்த சதீஷ், நடிகராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் விவேக் ப்ரசன்னா மற்றும் இவரது கீழ்வீட்டில் லோன் கேட்டு வங்கிக்கு அலையும் ஒரு விவசாயி என நால்வர் உள்ளனர்.
இவர்கள் அனைவரின் வாழ்விற்கும் பணத்தேவை தான் முக்கிய பங்காக உள்ளது. ஆதலால் இவர்கள் நால்வரும் ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். இவர்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கும் கொள்ளையடிக்க வருகிறது.
இவர்களுடன் வந்த சிம்பன்ஸி அபாய பட்டனை அழுத்த போலிஸார் இவர்களை சுற்றி வளைக்கின்றனர். இவர்கள் அங்கிருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதே நகைச்சுவை கலந்த திரைக்கதை.
பீட்டா எதிர்ப்பு
இத்திரைப்படத்தில் நிஜ குரங்கினை நடிக்க வைத்துள்ளதற்காக பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திரைத்துறையில் விலங்குகள் குறைந்த காட்சிகளில் இடம்பெற்றிருந்தாலும் அதற்காக விலங்கிற்கு ஷாக் குடுப்பது, அடிப்பது என்று பயிற்சியாளர்கள் துன்புறுத்துவதாகவும், தற்போது உள்ள தொழில்நுட்பம் உதவி கொண்டு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன்களில் படத்தினை உருவாக்கலாம். விலங்குகளை உங்கள் லாபத்திற்காக ஏன் துப்புறுத்த வேண்டும் என எதிர்த்துள்ளனர் பீட்டா.
ரிலீஸ்
இத்திரைப்படமானது 2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பினை தொடங்கி, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுடன் படத்தின் ஃபிர்ஸ்ட் லுக் போஸ்டர் 2018-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 21-ல் வெளியானது. பின்னர் இப்படத்தின் டீஸர் 2018- செப்டம்பர் -16ல் வெளியானது. அதே ஆண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கபட்டிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் 2019-க்கு தள்ளிப்போனது.
பின்னர் படக்குழு இப்படத்தின் ட்ரைலரை 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ல் வெளியிட்டுள்ளனர். பல எதிர்ப்புக்கு பின்னர் இப்படத்தினை 2019 ஜூன் 21ல் வெளியாகும் என வெளிவந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன்ஸ் பணிகள் தீவரமாக நடந்து வந்துள்ள நிலையில் 2019 ஜூன் மாதம் 20-ல் இப்படத்தினை எதிர்த்து பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆகையால் இப்படமானது 2019-ம் ஆண்டு ஜூலை 5-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இத்திரைப்படம் 2019 ஜூலை 5ல் வெளியாகும் என இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிற நிலையில், இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அதே நாளில் ஸ்பைடர்மேன், ராட்சஷி, களவாணி 2 ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திலும் திரைக்கதை குழந்தைகளை கவரும் வகையில் அமைந்திருப்பதால், இப்படத்தின் வெளியிட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.