X
ஹீரோ
Action | 20 Dec 2019 | U | 164 Mins
Tamil

ஹீரோ கதை

ஹீரோ இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் சர்ஜா, கல்யாணி பிரியதர்சன் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டர் ரூபன் எடிட்டிங் செய்கிறார். மேலும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன் நடிப்பதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து இப்படத்தில் நாச்சியார் திரைப்பட நாயகி இவானா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர் நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஆவார். இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் 13-ம் தேதியில் தொடங்கியுள்ளது.

இத்திரைப்படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்சன் ஹிந்தியில் வெளிவந்த "க்ரிஸ்ஸ் 3" திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிர்வாகியாக பணியாற்றியதுடன், பின்னர் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படத்தில் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
 
இப்படத்தின் இயக்குனர் பி எஸ் மித்ரன் 2018ம் ஆண்டு வெளியான இரும்புத்திரை படத்தினை இயக்கி தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இப்படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் அழுத்தமான வசனங்கள் மூலம் பிரபலமான இவர், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பணியாற்றும் திரைப்படம் தான் ஹீரோ.

இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் இப்படத்தின் இயக்குனர் பி எஸ் மித்ரன் ஆகியோர் இதற்கு முன்பு 2010ம் ஆண்டு ஒரு குறும்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

ஹீரோ திரைப்படத்தின் கதை

1990 - 2000ம் காலகட்டங்களில் தொலைக்காட்சிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சூப்பர் ஹீரோ தொடர்களை பார்த்து அவர்களை போல் மாற வேண்டும் என ஆசைப்படும் பல சிறுவர்களில் நாயகன் சக்தி-யும் (சிவ கார்த்திகேயன்) ஒருவர். இதனால் இவர் தனது படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினை இழக்கிறார். பின் தனது சூப்பர் ஹீரோ சக்தியை வெளிப்படுத்த மாடியில் மேல் இருந்து குதித்து விபத்தில் சிக்குகிறார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இவரிடம், சூப்பர் ஹீரோ என்பது கற்பனையே நமது பிரச்சனைகளை நாம் தான் சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி சக்தியை திருத்துகிறார் அவரது தந்தை.

சில வருடங்களுக்கு பின்னர், ஒரு பிரச்சனையில் இருந்து தனது தந்தையை காப்பாற்ற நாயகன் சக்தி (சிவகார்த்திகேயன்)-க்கு பணம் தேவை வருகிறது. அச்சமயம் அவரது கல்வி சான்றிதழை ஒரு பெரிய தொகைக்கு விற்கிறார். அப்போது பணத்தின் தேவையையும், பணத்தின் அத்யாவசத்தையும் புரிந்த சிவா, பணத்திற்காக தனது பிரின்டிங் பிரஸ் கடையில், சான்றிதழ் இல்லாதவர்களுக்கு போலி சான்றிதழை உருவாக்கி பெரிய தொகைக்கு விற்று வருகிறார்.

பின் ஒரு தலையாக நாயகி கல்யாணி ப்ரியதர்ஷினியை காதலித்து வரும் இவர், அவருக்காக சில தவறுகளை செய்கிறார். சக்தி வசித்து வரும் பகுதியில் உள்ள மதி (இவானா) இவருடன் சகோதரன் - சகோதரியாக பழகுகிறார். மதி ஏரோநாட்டிகல் படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

பணக்காரர்களிடம் இருந்து சில பணங்களை திருடி ஏழை மற்றும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் எதிர்காலத்திற்காக, அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு கொண்டு வரும் நோக்கில் யாருக்கும் தெரியாமல் ஒரு பள்ளி ஒன்றினை நிறுவி போராடி வருகிறார் சத்யமூர்த்தி (அர்ஜுன்).

சத்யமூர்த்தி பள்ளியில் மதி படித்து வருகிறார், தான் ஏரோநாட்டிகல் படிக்கவேண்டும் என ஆசை கொள்ளும் மதி சுயமாக ஒரு இயந்திரத்தை கண்டறிகிறார். இதற்கு சக்தி (சிவா), சத்யமுர்த்தி (அர்ஜுன்)-ற்கு தெரியாமல் நிறைவேற்றுகிறார். பின் மதியை ஒரு நல்ல கல்லூரியில் சேர்ப்பதற்காக அழைத்து செல்கிறார் சிவா.

மதி கண்டு பிடித்த அந்த இயந்திரத்தை பற்றி வெளியுலகிற்கு தெரிய வருகிறது, அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வில்லன் மகாதேவ் (அபி தியோல்) சில சூழ்ச்சி வேலைகள் செய்து மதிக்கு திருட்டு பட்டம் கட்டுகிறார். இதனால் மனமுடையும் மதி தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த மரணத்தால் அர்ஜுனின் அறிமுகம் கிடைக்கிறது சக்திக்கு, இதுபோன்ற செயல்களை தடுக்க ஒரு ஹீரோ வேண்டும் என அர்ஜுன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். இதன் பின்னர் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் சிவகார்த்திகேயன். பின் அர்ஜுன் ஏன் மறைந்து வாழ்கிறார்? இதற்கு பின்னால் உள்ளவர் யார்? நமது கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள் தேவை? சூப்பர் ஹீரோவாக மாறி சிவா சந்தித்த இன்னல்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
ஹீரோ படத்தின் அறிவிப்புகள்

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று இணையத்தளத்தில் வெளியாகி பிரபலமானதை தொடர்ந்து செப் 6ல் இத்திரைப்படம் டிசம்பர் 20-ல் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.  

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+