twitter
    Tamil»Movies»Iruttu»Story

    இருட்டு கதை

    இருட்டு வி ஜெட் துரை இயக்கத்தில், சுந்தர் சி, சாய் தன்ஷிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புலன் விசாரணை கொண்டுள்ள திகில், திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் கிரிஷ் ஜி இசையமைத்துள்ளார்.

    திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி மற்றும் படத்தொகுப்பாளர் ஆர் சுதர்ஷன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    இருட்டு படத்தினை பற்றிய ரிலீஸ் மற்றும் பிரத்தியேக தகவல்கள்

    இப்படத்தின் இயக்குனர் வி ஜெட் துரை இயக்கத்தில் சமீபத்தில் 2018-ம் ஆண்டு வெளியான ஏமாளி படத்தினை தொடந்து இத்திரைப்படமும் வெளியாகவிருந்த நிலையில் இப்படத்தின் வெளியிட்டு தேதி தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான காரணங்களும் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியவில்லை, பல தடைகளுக்கு பின்னர் இப்படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ல் வெளியிட இப்படக்குழு முடிவு செய்துள்ளது.

    இப்படத்தின் இயக்குனர் வி ஜெட் துரை, தமிழ் திரையுலகில் 2000ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தல அஜித் குமார் - ஜோதிகா நடித்துள்ள முகவரி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர்.

    சமீப காலமாகவே திகில் படங்களில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் பார்க்கப்படுகிறது. திகில் படத்தில் இருந்து திகில் நகைச்சுவை படங்களாக இயக்க பல இயக்குனர்கள் நாட்டம் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இப்படம் அமையாது. ஒரு நல்ல திகில் படத்திற்கான அணைத்து சுவாரஸ்ய திரில்லர் காட்சிகளுடன் இப்படம் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருட்டு படத்தின் சுவாரஸ்யமான கதை

    மலைப்பகுதிகளில் உள்ள ஒரு கிராமத்தில் நண்பகல் 12 மணி அளவில் தீடிரென வானம் இருள்கிறது. பின்னர் அங்கு சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனை விசாரித்து வரும் ஒரு காவல் அதிகாரி தற்கொலை செய்து கொள்கிறார். அதனால் அந்த கிராமமே அச்சத்தில் உள்ளது.

    அச்சமயம் அந்த கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதனை பற்றி கண்டறிய காவல் துறையால் இப்படத்தின் நாயகன் சுந்தர் சி அந்த கிராமத்திற்கு இடம் மாற்றப்படுகிறார். தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அந்த கிராமத்திற்கு வரும் சுந்தர் சி, வந்ததும் இவரது விசாரணையை தொடங்குகிறார்.

    இவர் விசாரணையில் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் மரமாக உள்ளது. அதனால் குழப்பம் அடையும் சுந்தர் சி அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கிறார். பின்னர் அவருடைய வாழ்க்கையிலேயே சில அமானுஷிய விஷயங்கள் நடக்கின்றது.

    பின் நடந்தது என்ன? சுந்தர் சி இதற்கான காரணத்தை கண்டறிந்தாரா? என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie இருட்டு with us? Please send it to us ([email protected]).