J.பேபி - இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் என பலர் நடித்திருக்கும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களான பா.ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸுரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் டோனி ப்ரிட்டோ இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷண்முகம் வேலுசாமி எடிட்டிங் செய்துள்ளார். J.பேபி படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுப்பு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் 2022 மார்ச் 29ல் வெளியானது.
J.பேபி திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 மார்ச் 8ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
J.பேபி திரைப்படத்தின் கதை
மனநலம் சற்றே பாதிக்கப்பட்ட பேபி (ஊர்வசி) தன்னால் குடும்பத்தில் யாருக்கும் தொல்லை வந்து விடக் கூடாது என நினைத்து வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அம்மா காணாமல் போய் விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளும் மகன்களான செல்வமும் சங்கரும் (தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன்) அம்மாவை தேட தொடங்குகின்றனர். காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கின்றனர். பின்னர், கொல்கத்தாவில் பேபி இருக்கிறார் என்கிற தகவல் மகன்களுக்கு தெரிய வர அம்மாவை தேடிக் கண்டுபிடிக்க அண்ணனும் தம்பியும் கொல்கத்தாவுக்கு செல்வதும் அங்கே அம்மாவை தேடி கண்டு பிடித்தார்களா? இல்லையா என்பது தான் இந்த ஜே. பேபி படத்தின் கதை.