ஜடா இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதிர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தி பொயட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கால்பந்து விளையாட்டினை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ல் இணையத்தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் சென்னையில் நடக்கும் ஒரு கால்பந்து லீக் ஆட்டத்தினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.