twitter

    ஜகமே தந்திரம் கதை

    ஜகமே தந்திரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், சஞ்சனா நடராஜன் என திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    திரைப்பட ரசிகர்கள் குடும்பத்தோடு கண்டு ரசிக்கும் வகையில் ஒரு அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். ஜகமே தந்திரம் திரைப்படம் ஆன்லைன் ஓடிடி தளமான 'நெட்ப்ளிக்ஸ்' தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி நேரடியாக வெளியாகியது.





    ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    மதுரையில் ஒரு ரவுடியாக பலரை பகைத்து கொள்ளும் நாயகன் தனுஷ், ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க சிலரின் அறிமுகத்தோடு லண்டன் செல்கிறார். பின்னர் அங்கு உள்ள ஒரு கூலி படையில் அடியாளாக இணையும் தனுஷ், சில சூழ்ச்சிகளில் சிக்கி அதிலிருந்து எவ்வாறு தப்பித்தார் என்பதே படத்தின் கதை. 

    ஜகமே தந்திரம் கதை

    லண்டனில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிசெய்யும் ஷரத் ரவி, தனது டீம் மீட்டிங்கில் குடுக்கப்பட்ட ரௌடிசம் தலைப்பில் நடிகர் தனுஷ் (சுருளி)யை பற்றி பல விஷயங்களை பேசுகிறார். இதனை அறிந்த லண்டன் தாதா பீட்டர் தனுஷை அழைத்து வர சொல்லி ஷரத் ரவி-யை தமிழகம் அனுப்புகிறார்.

    மதுரையில் ஒரு ரௌடியாக ரௌடிசம் மற்றும் கொலைகளை செய்து வரும் தனுஷ், சில பிரச்சனைகளில் சிக்குகிறார். மதுரையில் தனுஷ்-யை சந்தித்து தனக்கு வேலை செய்யும் படி கேட்டகிறார், லண்டன் தாதா மற்றும் ஷரத் ரவி.

    லண்டனிற்கு தனுஷ்-யை அழைத்து வந்து, அங்கு சட்டவிரோதமாக பல கடத்தல்களை செய்யும் சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்) என்பவரை கொலை செய்ய தனுஷிற்கு பணம் கொடுக்கின்றனர். இவரும் பல சூழ்ச்சிகள் செய்து சிவாதாஸ் என்பவருக்கு நம்பிக்கை துரோகம் செய்து கொலை செய்கிறார்.

    இதற்காக படத்தின் நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி தனுஷை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கிறார். இதனை அறிந்த தனுஷ், நாயகியை தாக்க, நாயகி சிவதாஸ் பற்றிய உண்மைகளை தனுஷிடம் எடுத்துரைக்கிறார்.

    சிவதாஸ் ஈழ தமிழ் (தமிழீழம்) மக்களுக்காகவும், நாடு - இருப்பிடம் என அணைத்தையும் இழந்த அகதி என்று அழைக்கப்படும் மக்களுக்காக போராடி வருகிறார். இந்த மக்களுக்காக போராட பணம் தேவை படுவதால், சட்டவிரோதமான கடத்தல்கள் செய்கிறார். இதற்காக லண்டன் நாட்டின் இன வெறி பிடித்த தாதா பீட்டர் மற்றும் சிவதாஸ் இடையே பகை உண்டாகிறது.

    ஆனால் சிவதாஸ் பற்றிய உண்மைகளை அறியாமல் அவரை கொள்ளும் தனுஷ், துரோகி என நாயகி, தனுஷின் தாய் வடிவுக்கரசி என அனைவராலும் ஒதுக்கப்படுகிறார். பின் தனுஷ் வெள்ளையர்களால் ஒதுக்கப்படும் அகதி மற்றும் ஈழ தமிழ் மக்களுக்காக போராடுவதே இப்படத்தின் கதை.

    ஓடிடி-யில் ஜகமே தந்திரம்

    ஜகமே தந்திரம் திரைப்படம் பிரபல முன்னணி ஆன்லைன் ஓடிடி தளமான 'நெட்ப்ளிக்ஸ்' தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி வெளியாகியது. இப்படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு முற்றிலுமாக முடிவடைந்து, 2020 ஆம் ஆண்டின்  கோடைகாலத்தில் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா நோய் தோற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. அதனால் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியீட்டிற்கு தள்ளி சென்றது.

    தனுஷின் கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 இல் வெளியாகி தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றது. பின்னர் கொரோன இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. திரையரங்குகள் மூட பட்டதால் பல தமிழ் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகாமல் உள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் ஒரு நல்ல தொகைக்கு இப்படத்தினை நெட்ப்ளிக்ஸ் ஆன்லைன் ஓடிடி தளத்திற்கு ஒப்படைத்துள்ளார்.

    ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பட்ஜெட் விவரங்கள்

    ஜகமே தந்திரம் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு மதிப்பு மொத்தம் 65 கோடிகள் ஆகும்.

    திரைப்படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் 55 கோடிகள், பின் இப்படம் தயாராகி பல மாதங்கள் வெளியிடாமல் இருந்துள்ளது, இதற்காக 10 கோடிகள் வட்டி அதிகரித்துள்ளது.

    இப்படத்தில் தனுஷ்-ற்கு 15 கோடிகள் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது, பின்னர் இப்படத்தின் இயக்குனருக்கு 5 கோடியும், இசையமைப்பாளருக்கு 75 லட்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தினை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 55 கோடிகளுக்கு வாங்கியுள்ளது, பின்னர் ஹிந்தி டப்பிங் உரிமை 6.5 கோடிகள், தொலைக்காட்சி உரிமை 10 கோடி என மொத்தம் 72.5 கோடிகளுக்கு இப்படத்தினை விநியோகம் செய்துள்ளார், ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர்.

    ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு 7.5 கோடிகள் லாபம் கிடைத்துள்ளது. (இந்த தகவல்கள் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் வெளியாகும் அதிகாரப்பூர்வமானது  இல்லை, திரைவட்டாரங்களில் இருந்து தகவல்களை திரட்டி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.)
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜகமே தந்திரம் with us? Please send it to us ([email protected]).