ஜாங்கோ இயக்குனர் மனோ காத்திகேயன் இயக்கத்தில் சதீஷ் குமார், மிர்னாலினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சி.வி. குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அறிவியல் புனைவு சமந்தமான திரைக்கதையில் ஒரு திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாயவன், இன்று நேற்று நாளை போன்ற ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்தினை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், 2020ஆம் ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்புகளுடன் இணைந்து இப்படத்தின் டீஸர் வெளியானது.
ஜாங்கோ திரைப்படத்தின் கதை
படத்தின் நாயகன் சதீஷ் குமார் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். இவர் ஒரு நாள் தனது வாகனத்தில் செல்லும் பொழுது ஒரு எரிகல் விண்வெளியில் இருந்து வருவதை காண்கிறார். அச்சமயத்தில் இருந்து அவர் டைம் லூப் என்னும் ஒரு விசித்திர சூழலில் மாட்டி கொள்கிறார். ஒரு நிமிடம் நடக்கும் சூழல் மீண்டும் மீண்டும் நடப்பதே இந்த டைம் லூப் எனப்படுவது ஆகும்.
சதீஸ் மற்றும் படத்தின் நாயகி மிருணாளினி திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணத்தால் பிரிந்து வாழ்கின்றனர். அவரது வாழ்க்கையில் நடத்த ஒரு நாள் மீண்டும் மீண்டும் நடக்க, அதை நாயகன் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.