twitter

    க/பெ. ரணசிங்கம் கதை

    க/பெ. ரணசிங்கம் இயக்குனர் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரான கொட்டப்படி.ஜெ.ராஜேஷ் தனது கே.ஜெ.ஆர் நிறுவனம் மூலம் தயாரிக்க, கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

    அரசியல் பின்னணி மற்றும் ஜெனரஞ்ஜகமாக உருவாகியுள்ள இபபடத்திற்கு ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, பட தொகுப்பாளர் ஷிவண்டீஸ்வரன் எடிட்டிங் பணி செய்துள்ளார்.




    க/பெ. ரணசிங்கம் படத்தின் பிரத்தியேக தகவல்கள்

    இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை 'பவனி ஸ்ரீ' புதுமுக நடிகை நடித்துள்ளார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தினர் மற்றும் தமிழ் சினிமா நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் தங்கை ஆவார். 

    இத்திரைப்படத்தின் அறிவிப்புகள் 2019 ஜூன் 11ல் இணையத்தளத்தில் வெளியானது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணத்தால் தமிழ் நாடு திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டது. இக்காரணத்தால் இப்படம் இணையத்தில் வெளியாகிறது.

    ஓ டி டி-யில் க/பெ. ரணசிங்கம்

    சில காரணங்களால் தமிழக திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்ட நிலையில் இப்படம் வெளியாவது தமிழ் சினிமாவில் தாமதமாகியுள்ளது. திரையரங்குகளுக்கு அடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனம் இணையத்தள ஓ டி டி பக்கம் திரும்பியது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சி உரிமையாளரின் ஓ டி டி பக்கமான ஜி5 ஓ டி டியில் இப்படம் 2020 அக்டோபர் 2ல் வெளியாகவுள்ளது. இப்படத்தினை ஜி5 ஓ டி டி பக்கத்தில் பணம் செலுத்தி பார்க்கும் வகையில் இப்படத்தினை வெளியிடவுள்ளனர் ஜீ தமிழ் நிருவாகிகள்.

    க/பெ. ரணசிங்கம் கதைக்கரு

    வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்று உயிரிழந்த தனது கணவனின் உடலை மீட்டு, தாயகம் கொண்டுவரப் போராடும் சாமானியப் பெண்ணின் கண்ணீர்க் கதை க/பெ. ரணசிங்கம்.

    க/பெ. ரணசிங்கம் படத்தின் கதை

    தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழும் மக்களுக்காக அரசாங்கத்தின் சட்டங்களை எதிர்த்து போராடுகிறார் ரணசிங்கம் (விஜய் சேதுபதி). இவர் அங்கிருக்கும் தண்ணீர் மற்றும் விவசாயத்தை சார்ந்து இருக்கக்கூடிய பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி மக்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்தி வருகிறார். யாருக்காகவும் பின்வாங்காமல் இவர் நடத்தும் போராட்டங்களால் அங்கு உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் பகையை சம்பாதிக்கிறார்.

    ஒரு கட்டத்தில் தன்னுடன் போராடிக் கொண்டிருந்த அத்தனை பேரும் உண்மையில் சுயநலம் கொண்டு அவர்களின் ஆதாயத்திற்காக இருக்கின்றனர் என்பதைனை அறியும் ரணசிங்கம் மனவுடைகிறார். பின் தனது குடும்ப நலத்திற்காக வெளிநாட்டிற்கு ஒரு கூலி தொழிலாளியாக வேலைக்கு செல்கிறார்.

    சுமார் 2 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்க்கும் ரணசிங்கம், அங்கு நடக்கும் ஒரு கலவரத்தில் சிக்கி துப்பாக்கி சூட்டில் பலியாகிறார். இந்த செய்தி இந்தியாவில் உள்ள ரணசிங்கத்தின் குடும்பத்திற்கு வந்தடைகிறது. பின் ரணசிங்கத்தின் மீது சில வழக்குகள் உள்ளதால் அவர் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.

    ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன் கணவனின் உடலை மீட்க எல்லாவிதப் பிரயத்தனயங்களையும் செய்கிறார். கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர், எம்.எல்.ஏ, மத்திய அமைச்சர் என அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எல்லோரிடமும் நடையாய் நடந்து, அலைந்து கோரிக்கை மனு கொடுக்கிறார். அதிகாரிகள் கேட்கும் எல்லா ஆவணங்களையும் கொடுத்து அலுத்துப் போகிறார்.

    அரசு அதிகாரிகளுக்கு எதிராக ரணசிங்கம் நடத்திய போராட்டம் காரணமாக யாரும் உதவ முன்வராததால், இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு தனது கைக்குழந்தையுடன் கிளம்புகிறார் அரியநாச்சி. பின் டெல்லியில் தனது கணவனின் உடலை வெளிநாட்டில் இருந்து தாயகம் கொண்டு வர அரியநாச்சி எடுக்கும் முயற்சிகளே இப்படத்தின் திரைக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie க/பெ. ரணசிங்கம் with us? Please send it to us ([email protected]).