காலங்களில் அவள் வசந்தம் - இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கௌஷிக், அஞ்சலி நாயர், அனிதா சம்பத் என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை அறம் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, Vsquare என்டர்டைன்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2022, அக்டோபர் 28ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு / ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
கதை
அஞ்சலி நாயர் நாயகன் கெளசிக்கை பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசையில் அலைந்து வரும் நாயகனுக்கு ஹிரோஷினியுடன் காதல் ஏற்படுகிறது. காதலிக்காக மனைவியை பிரிந்தாரா? அல்லது மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.