காற்றின் மொழி கதை

    காற்றின் மொழி என்ற வித்யாபாலன் நடித்த ஹிந்தி திரைப்படம் தமிழில் ஜோதிகா நடிப்பில் மீளுருவாக்கம் செய்யப்படவுள்ளது. 

    கதை : 

    மிடில் கிளாஸ் தம்பதியான பாலு (விதார்த்)- விஜயலட்சுமிக்கு (ஜோதிகா) ஒரே மகன் சித்து (மாஸ்டர் தேஜாஸ்). கணவர் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்க, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறார் விஜி. ஆனால் அவரது அக்காக்கள் இருவரும் நன்றாக படித்து வங்கி பணியில் இருக்கிறார்கள். ஆனால் ப்ளஸ் 2 பெயிலான விஜிக்கு தெரிந்ததெல்லாம் சமையல் மட்டுமே. இதனாலேயே பல அவமானங்களை சந்திக்கும் விஜி, எப்படியாவது வேலைக்கு போய் சாதிக்க வேண்டும் என துடியாய் துடிக்கிறார். அவரே எதிர்பாராதவிதமாக எஃப்.எம்மில் ஆர்.ஜே வேலை கிடைக்கிறது. ஆனால் இந்த வேலையே அவரது குடும்பத்தின் சந்தோஷத்திற்கு வேட்டு வைக்கிறது. ஆர்.ஜே. வேலையை விஜி தொடர்ந்தாரா இல்லை விலகினாரா என்பதே படம்.
    **Note:Hey! Would you like to share the story of the movie காற்றின் மொழி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).