காற்று வெளியிடை இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில், நடிகர் கார்த்தி நடிக்க, வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுத, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தினை தானே தயாரித்துள்ளார் மணிரத்தினம்.
கதை :
இந்திய விமானப்படையின் பைலட்டான கார்த்திக்கு காஷ்மீரில் வேலை. ஒரு நாள் தோழியுடன் ஜீப்பில் பயணிக்கும்போது விபத்தில் சிக்கி அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கிறார் டாக்டர் அதிதி. நாளடைவில் இருவருக்கும் காதல், புரிதல் இல்லாததால் ஊடல், மோதல்... பிரிவு. அதன் பின்னர் கார்த்தி பாகிஸ்தான் ராணுவத்திடம் போர்க் கைதியாக சிக்கிக் கொள்ள, எப்படி மீள்கிறார்... காதல் என்னவானது என்பது மீதி.